Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவரும் நானும்...அவரில்லாமல் நானில்லை...திருமண நாளுக்கு குஷ்புவின் ரொமான்டிக் பதிவு
சென்னை : மும்பையை சேர்ந்தவரான குஷ்பு, டைரக்டர் சுந்தர்.சியை 2000 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண்கள் குழந்தைகள் உள்ளன.
ஆள
விடுங்கடா
சாமி..
யாரிடமும்
திரிஷ்யம்
3
கதையை
கடன்
வாங்க
வேண்டிய
அவசியம்
இல்லை..
ஜீத்து
டென்ஷன்!
திருமணம் நடந்தது முதல் தனது கணவரின் பிறந்தநாள், சுந்தர்.சி தன்னிடம் காதலை சொன்ன தினம் என ஒவ்வொன்றிற்கும் சுந்தர்.சி மீது தனக்கு இருக்கும் காதலை வெளிப்படும் விதமாக குஷ்பு ஏதாவது ஒன்றை செய்து வருகிறார்.

21 வது திருமண நாள்
தற்போது அரசியலில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார் குஷ்பு. இந்நிலையில் இவர்கள் தங்களின் 21 வது திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.

குஷ்புவின் ரொமான்டிக் பதிவு
இதனை கொண்டாடும் விதமாக குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமான்டிக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சுந்தர்.சியுடன் இருக்கும் போட்டோக்கள் சிலவற்றை பதிவிட்டு அத்துடன், அப்போது முதல் இப்போது வரை என் வாழ்க்கை பயணம் சந்தோஷமாக உள்ளது. நீங்கள் என்னுடன் இருப்பதால். நான் நம்பிக்கையுடன் நடக்கிறேன், நீங்கள் என் கை பிடித்து நடப்பதால்.

உன்னால் நான்
நான் சுதந்திரமாக பேசுகிறேன், நீங்கள் உங்கள் எண்ணங்களை என் மீது திணிக்காததால். இதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் என் வாழ்க்கையில் வந்து, வாழ்க்கையை மிக அழகான சொர்க்கமாக்கியதற்காக நன்றி சொல்ல நினைக்கிறேன்.

நாணத்தை உணர்கிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் உயிரே. நீங்களும் நானும் வாழ்க்கையில் அதிகாரப்பூர்வமாக ஒன்றாக இணைந்து 21 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இப்போதும் நீங்கள் ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போதும் நானத்தை உணர்கிறேன். இவ்வாறு குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.