நக்கத் கானை கழற்றிவிட்டு ஆலோசனை கேட்கும் குஷ்பு: என்னாச்சுங்கஜி?
சென்னை:மீண்டும் படங்களில் நடிப்பதை தொடரலாமா என்று குஷ்பு ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியலில் பிசியாக இருக்கும் குஷ்புவின் திடீர் மாற்றம் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. ட்விட்டரில் தன் பெயரை குஷ்பு, பக்தாஸுக்கு நக்கத் கான் என்று வைத்திருந்தார்.
இந்நிலையில் அந்த நக்கத் கான் பகுதியை நீக்கிவிட்டு வெறும் குஷ்பு சுந்தர் என்ற பெயரை மட்டும் தற்போது வைத்திருக்கிறார்.
குஷ்பு
உங்களின் அறிவுரை தேவை நண்பர்களே..நான் மீண்டும் படங்களில் நடிக்கட்டுமா?.கூட்டத்தில் ஒருத்தியாக இல்லாமல் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்...என் மூத்த மகள் கல்லூரிக்கு சென்றுவிட்டதால் தற்போது நேரம் உள்ளது...நடிக்கட்டுமா? என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

பக்தாஸ்
குஷ்பு தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியது, மீண்டும் படங்களில் நடிக்கலாமா என்று கேட்டுள்ளதை பார்த்தவர்கள் அவர் அரசியலை விட்டு விலகுகிறார் என்று பேசத் துவங்கியுள்ளனர். அப்படி என்றால் குஷ்பு ட்விட்டரில் பக்தாஸுக்கு லெஃப்ட் அன்ட் ரைட் கொடுப்பதை நிறுத்திவிடுவாரா என்று சிலருக்கு கவலை ஏற்பட்டுள்ளது. உங்க கவலை உங்களுக்கு....

ரசிகர்கள்
குஷ்புவின் ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இது என்ன மேடம் இப்படி ஒரு கேள்வி, நீங்கள் கண்டிப்பாக மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும். நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஊக்குவித்துள்ளனர். சிலரோ, நீங்கள் மட்டும் தான் நடிக்க வருவீர்களா இல்லை ராகுல் காந்திக்கும் ரோல் கேட்பீர்களா என்று கிண்டல் செய்துள்ளார்கள்.(கிண்டல் செய்துள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள்.)

சிறப்பு
கோலிவுட் கண்ட சிறந்த நடிகைகளில் ஒருவர் குஷ்பு. வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கத் தவறியது இல்லை அவர். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வந்தால் நிச்சயம் ஒரு பெரிய ரவுண்டு வருவார். குஷ்பு தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அவர் நடிப்புக்கு பிரேக் விட்டார் என்றும் கூற முடியாது. என்ன சின்னத்திரையோடு நின்ற குஷ்பு தற்போது பெரிய திரைக்கும் வர உள்ளார். வாங்கம்மா வாங்க வீ ஆர் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











