அந்த பிரபல ஹீரோவுடன் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்.. மலரும் நினைவுகளில் நடிகை குஷ்பு!
சென்னை: அந்த பிரபலமான ஹீரோவுடன் நடிக்க இன்னும் ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார் குஷ்பு.
இப்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்க இருக்கிறார். டிவி.நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ரனதீரா அறிமுகம்
இதற்கிடையே அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பெங்களூரு சென்றிருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். குஷ்பு, கன்னட சினிமாவில் ரனதீரா என்ற படம் மூலம் அறிமுகமானார். இது இந்தி படத்தின் ரீமேக்.

புகழ் பெற்றார் குஷ்பு
இதை, கன்னட ஹீரோ ரவிச்சந்திரன் இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதன் மூலம் கன்னடத்தில் குஷ்பு, புகழ் பெற்றார். 1988 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதுபற்றி நடிகை குஷ்பு நினைவுகளை பகிர்ந்தார். அவர் கூறும்போது, 'எனது முதல்படமே இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்று நினைக்கவில்லை.

ஐஸ்கிரீம் வாங்க
தமிழில் அறிமுகமாகும் முன்பே, கன்னட சினிமாவின் ஒரு பகுதியாக இருந்தேன். பெங்களூர் என்றதும் பழைய கார்டன் சிட்டி நினைவுக்கு வந்துவிடும். ஐஸ்கிரீமுக்காக எம்.ஜி.ரோடுக்கு சென்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் அவர் குடும்பத்தினருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன்.

ஆர்வமாக இருக்கிறேன்
மீண்டும் அவருடன் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அதற்கான கதை அமைந்தால், அவருடன் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ரசிகர்கள் எங்களை சிறப்பான ஜோடியாக மனதில் வைத்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதமாக இருந்துவிடக் கூடாது. அதனால் சிறந்த வாய்ப்பு வரும் வரை காத்திருப்போம்' என்றார்.


Click it and Unblock the Notifications