மை டியர் மார்த்தாண்டன் முதல் நாள் ஷூட்டிங்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பு !

சென்னை : நடிகர் பிரபுவின் வித்தியாசமான நடிப்பில் 1990ஆம் ஆண்டு வெளியான மைடியர் மார்த்தாண்டன் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Khushbu Slapping Question • மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கா? | Pregnant Elephant

குஷ்பு மற்றும் பிரபு இணைந்து நடித்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஜோடிக்காகவே இன்றளவும் பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.

இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், நடிகை குஷ்பூ இதுவரை யாரும் காணாத அரிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 பலரின் விருப்பம்

பலரின் விருப்பம்

திரைப்படங்களில் ரீல் ஜோடியாக நடிக்கும் ஒருசில ஹீரோக்களும் ஹீரோயின்களும் ரசிகர்களால் சிறந்த ஜோடி என கொண்டாடப்பட்டு வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் 1990களில் பலரின் விருப்பம் ஜோடியாக இருந்தவர்கள் பிரபு மற்றும் குஷ்பு.

ரசிக்கப்பட்ட ஜோடியாக

ரசிக்கப்பட்ட ஜோடியாக

சின்ன தம்பி, கிழக்கு கரை, பாண்டித்துரை, மறவன், தர்மத்தின் தலைவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிரபு மற்றும் குஷ்பூ இணைந்து நடித்திருந்த நிலையில், இந்த ஜோடி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட ஜோடியாக பலராலும் விரும்பப்பட்டு வந்தது.

மைடியர் மார்த்தாண்டன்

மைடியர் மார்த்தாண்டன்

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் இயக்கத்தில் பிரபு இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த "மைடியர் மார்த்தாண்டன்" திரைப்படத்திலும் இந்த ஜோடி இணைந்தது.

இட்லி மணி

இட்லி மணி

மிகப் பெரிய ராஜ பரம்பரையில் பிறந்து வாழ்ந்த ஒரு ஆண், தனக்கு ஏற்ற ஒரு பெண்ணை தேடி திருமணம் செய்துகொள்ள அரண்மனையை விட்டு வெளியேற, சென்னையை சுற்றி அப்பெண்ணை தேடி அலையும் போது "இட்லி மணி" என்ற கதாபாத்திரத்தில் கவுண்டமணியிடம் அதற்கு வழி கேட்க, கவுண்டமணியும் கிடைத்தவரை லாபம் என பிரபுவிடம் இருக்கும் பணத்தை சுருட்டிக் கொள்ள திட்டம் போட கடைசியில் தான் தேடி வந்த பெண்ணை மணந்தாரா இல்லையா என்பதுதான் மைடியர் மார்த்தாண்டன் திரைப்படத்தின் கதை.

தெலுங்கிலும் ரீமேக்

தெலுங்கிலும் ரீமேக்

அனைவரும் வயிறு குலுங்க சிரித்து மகிழும் காமெடியுடன் சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் 1990ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஆன் ஸ்கிரீன் பெஸ்ட் பேர்

ஆன் ஸ்கிரீன் பெஸ்ட் பேர்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைடியர் மார்த்தாண்டம் முதல்நாள் படப்பிடிப்பில் குஷ்பூ, பிரபு பிரதாப்போத்தன் மற்றும் பலருடன் எடுத்துக் கொண்ட இதுவரை பலரும் காணாத அரிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பூ வெளியிட்டுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த போட்டோவை பார்த்து ஆச்சரியத்துடன் ரசித்து வரும் நிலையில், நீங்கள் இருவரும் என்றுமே "ஆன் ஸ்கிரீன் பெஸ்ட் பேர்" என கூறியதோடு இளம் வயது குஷ்புவை தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X