தோட்டத்துக்கு போகலாம் வாங்க…. குஷ்பு பகிர்ந்த வீடியோ !

தோட்டத்துக்கு போகலாம் வாங்க.... குஷ்பு பகிர்ந்த வீடியோ !

சென்னை : கொரோனா காலத்தில் வீட்டிலிருக்கும் பல நடிகர், நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர்.

கிடைத்த நேரத்தை பயனுள்ள வகையில் மிகவும் உபயோகமான முறையில் வீட்டில் தோட்டத்தை உருவாக்கி வருகின்றனர்.

அதேபோல, நடிகை குஷ்பு தனது வீட்டிலுள்ள தோட்டம் குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காய்கறி தோட்டம்

காய்கறி தோட்டம்

தமிழ் சினிமாவிலுள்ள பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆர்வத்துடன் விவசாயம் செய்து வருகிறார்கள். பல நடிகர்களும் தங்கள் வீட்டில் அழகிய காய்கறித்தோட்டம், மலர்த்தோட்டம், மாடித்தோட்டம் உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளனர்.

என்வீட்டும் தோட்டத்தில்

என்வீட்டும் தோட்டத்தில்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்துள்ள வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த தோட்டத்தில் இருந்துதான் வீட்டிற்கு தேவையான காய்கறி, கீரைகளை எடுத்துக்கொள்வதாக கூறி இருந்தார். என் வீட்டுத் தோட்டத்தில் என்று தலைப்பிட்டு தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT PART-04 | AMITABH BACHCHAN தான் என்னோட CRUSH | FILMIBEAT TAMIL
தோட்டம்

தோட்டம்

அந்த வரிசையில் பிரபல நடிகை குஷ்பு தனது வீட்டிலுள்ள தோட்டம் குறித்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சில பழங்கள் மற்றும் காய்கறிகளைக் காட்டுகிறார், அதில் ஒரு இலையில் ஒரு பறவைக் கூடு கட்டியுள்ளதை மகிழ்ச்சியாக அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார். மேலும் ஒரு அல்லி படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.

படப்பிடிப்பு விரைவில்

படப்பிடிப்பு விரைவில்

தற்போது இவர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினி மற்றும் நயன்தாராவின் அனைத்து காட்சிகளையும் நடித்து முடிந்து கொடுத்துள்ளனர். குஷ்பு தேர்தல் பணியில் இருந்ததால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது. தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்குஅனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் பணி விரைவில் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

Read more about: khushbu குஷ்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X