கணவருக்கு பிறந்த நாள்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த குஷ்பு.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: இயக்குநர் சுந்தர் சியின் பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. முறை மாமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான சுந்தர் சி ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை இயக்கியுள்ள சுந்தர் சி, பல படங்களில் நடித்துள்ளார். குடும்ப சித்திரங்கள் காமெடி படங்கள், ஆக்ஷன் படங்கள் என ஆல் ரவுண்டராக வலம் வருகிறார்.

அரண்மனை சீரிஸ் படங்கள்

அரண்மனை சீரிஸ் படங்கள்

தொடர்ந்து அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 என பேய் படங்களை இயக்கி வரும் அவர், அந்தப் படங்களின் முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார். முறை மாமன் படத்தில் நடித்த போது குஷ்புவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இரண்டு மகள்கள்

இரண்டு மகள்கள்

அடுத்த 5 வருடங்கள் காதலித்து வந்த சுந்தர் சி மற்றும் குஷ்பு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு சினிமா அரசியல் என பிஸியாக உள்ளார்.

சுந்தர் சிக்கு வாழ்த்து

சுந்தர் சிக்கு வாழ்த்து

இந்நிலையில் சுந்தர் சி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் இயக்குநர் சுந்தர் சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

கணவருக்கு முத்தம்

கணவருக்கு முத்தம்

நடிகை குஷ்பு கணவர் சுந்தர் சியின் பிறந்த நாளை தனது மகள்களுடன் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு சுந்தர் சியை அணைத்து முத்தம் கொடுத்துள்ளார் குஷ்பு.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

மேலும் மகள்கள் மற்றும் மனைவி அணைத்திருக்க கேக்கை வெட்டி கொண்டாடுகிறார் சுந்தர் சி. இந்த போட்டோக்களை பகிர்ந்துள்ள குஷ்பு, எங்களின் வலிமை, எங்களின் உலகம்.. ஹேப்பி பர்த் டே லவ் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X