வெற்றிமாறன் பார்வையில கோளாறு இருக்கு.. ராஜ ராஜ சோழன் சர்ச்சை.. குஷ்பு பதிலடி!
சென்னை: ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக மாற்ற முயல்கின்றனர் என இயக்குநர் வெற்றிமாறன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அவருக்கு ஆதரவாக கருணாஸ், சீமான் உள்ளிட்டோர் பேசி வரும் நிலையில், அவரை எதிர்த்து பாஜகவை சேர்ந்த எச். ராஜா, குஷ்பு உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.
வெற்றிமாறனுக்கு பார்க்கும் பார்வை தான் சரி என நினைத்துக் கொண்டிருப்பது தவறு என நடிகை குஷ்பு கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

பூதாகரமாகும் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இயக்குநர் மணிரத்னம் ராஜ ராஜ சோழனை இந்து மன்னராக காட்டி உள்ளார் என சிலர் பேசத் தொடங்கியது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் வெற்றிமாறன் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து மன்னனாக சித்தரிப்பது போன்றவை நடைபெற்று வருகின்றன என பேசியிருந்தார்.

வெடித்த சர்ச்சை
ராஜ ராஜ சோழன் இந்து மன்னன் இல்லை என்றால் தஞ்சையில் அவர் எப்படி சிவன் கோயிலை கட்டினார் என்று ஏகப்பட்ட கேள்விகளுடன் இயக்குநர் வெற்றிமாறனுக்கு பாஜகவினர் கேள்வி எழுப்பினர். அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் அரசியல் மற்றும் சினிமா துறையில் கருத்துக்கள் எழத் தொடங்கி உள்ளன.

உலகம் எப்படி பார்க்குதோ
இயக்குநர் வெற்றிமாறன் குறித்து பேச விரும்பவில்லை எனக் கூறிய நடிகை குஷ்பு உலகம் எப்படி பார்க்குதோ நாமு அப்படித்தான் பார்க்க வேண்டும். உலகம் உருண்டை என்று சொன்னால் நாம் அதை நம்ப வேண்டும், இல்லை என்னுடைய உலகம் ஸ்கொயரா இருக்குன்னு சிலர் வாழ்ந்து கொண்டிருந்தால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது என்றார்.

பார்வை சரியில்லை
மேலும், இயக்குநர் வெற்றிமாறனின் பார்வையில் குறைபாடு இருக்கு, அவர் அவருக்கு தோன்றியதை மட்டுமே பிடித்ததை மட்டுமே சரி என சொல்வதெல்லாம் முறை கிடையாது. அவருக்கு ஐ சைட்ல ஏதோ பிராப்ளம் இருக்குன்னு நினைக்கிறேன் என விளாசி உள்ளார்.

வாரிசு படத்துல நடிக்கல
நடிகை குஷ்பு வாரிசு படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. வாரிசு படத்தில் நடித்து வரும் சரத்குமார் மற்றும் பிரபுவுடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு தான் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன் என்றும் வாரிசு படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் தெளிவுப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











