twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ச்சையாகும் குஷ்புவின் பதிவு...வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...அப்படி என்ன தான் சொன்னார் ?

    |

    சென்னை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் ஜனவரி மாதம் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    மீண்டும் வீடியோ...மீண்டும் சர்ச்சை...விடாத கங்கனா மீண்டும் வீடியோ...மீண்டும் சர்ச்சை...விடாத கங்கனா

    தடுப்பூசி பற்றாக்குறை பல இடங்களில் ஏற்பட்டுள்ளதால் பலர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அதே சமயம் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயது முதல் 45 வயதுடைய அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்தள்ளது.

    அரசுக்கு குஷ்பு கோரிக்கை

    அரசுக்கு குஷ்பு கோரிக்கை

    அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி தொடர்பாக நடிகை குஷ்பு அரசு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளார். சமீபத்தில் பாஜக.,வில் இணைந்த குஷ்பு, தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

    ரேஷன் கார்டுடன் இணைக்கனும்

    ரேஷன் கார்டுடன் இணைக்கனும்

    தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விபரத்தை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும். அப்படி செய்தாலாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பலர் ஊசி போட முன் வருவார்கள் என வலியுறுத்தி உள்ளார்.

    வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

    வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

    குஷ்புவின் இந்த பதிவு தான் ட்விட்டரில் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது. நாடு இருக்கும் இக்கட்டான சூழலில் குஷ்புவின் இந்த அராஜக தனமான பேச்சை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குஷ்புவிற்கு எதிராக பலர் கருத்துக்களை குவித்து வருகின்றனர். சிலர் ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு பதிவிட்டு வருகின்றனர். விமர்சிப்பவர்களுக்கும் குஷ்பு ட்விட்டரில் காரசாரமாக பதிலளித்து வருகிறார்.

    குஷ்பு இப்படி பேசுராறே

    குஷ்பு இப்படி பேசுராறே

    லாக்டவுன், கொரோனா பரவல் காலத்தில் வேலை இழந்து, தொழில்கள் முடக்கப்பட்ட நிலையில் ஏழைகளுக்கு அரசு தரும் ரேஷன் பொருட்கள் தான் உதவிகரமாக இருக்கையில், குஷ்பு இப்படி பேசி உள்ளாரே என பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

    English summary
    Many slamming Kushbhu for being woefully ignorant about the current situation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X