குஷ்பு மகளுக்கு திருமணம்.. மருமகன் ஷ்ரவன் சீனிவாசன் யார்? திருமணம் எங்கே? எப்போது?

சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் சி மற்றும் இயக்குநர், நடிகரான சுந்தர் சி தங்களது மூத்த மகள் அவந்திகாவின் திருமண அழைப்பிதழை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை குஷ்பு: தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் முறைமாமன் படத்தில் நடித்த போது இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு. பல வெற்றி படங்களை இயக்கிய சுந்தர் சி, தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இளைய மகள் அனந்திகா சமீபத்தில் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். தற்போது மூத்த மகள் அவந்திகாவின் திருமண செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Khushbu Sundar C marriage
Photo Credit:

மகளின் திருமண அழைப்பிதழ்: இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், இன்று டெல்லியில் இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கும் பெரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. எனது கணவர் சுந்தர் சி அவர்களும் நானும் இணைந்து எங்கள் மகள் அவந்திகாவுக்கும் ஷ்ரவன் சீனிவாசன் அவர்களுக்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கு அவரை அழைத்தோம். பிரதமர் அந்தத் தம்பதியினரை வாழ்த்தினார் என தெரிவித்துள்ளார்.

ஷ்ரவன் சீனிவாசன்: இந்நிலையில், குஷ்புவின் வருங்கால மருமகனான ஷ்ரவன் சீனிவாசன் குறித்து இதுவரை பெரிய தகவல்கள் வெளியாகவில்லை. அவர் என்ன தொழில் செய்கிறார், எந்த துறையைச் சேர்ந்தவர் என்பதற்கான விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேபோல், திருமண தேதி மற்றும் நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பலரும் குஷ்பு குடும்பத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X