குடும்பத்தை இப்படி கொண்டாடனும்.. ஃபேமிலி புகைப்படத்தை இறக்கி அசத்திய குஷ்பு!
சென்னை: நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி தம்பதியர் தமிழ் சினிமா தம்பதியர்களில் பலரது கவனத்தை ஈர்த்த தம்பதியர்களில் இவர்களுக்கு தனி இடம் உண்டு. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தங்களது 26 வது திருமண ஆண்டைக் கொண்டாடும் விதமாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் குஷ்பு. அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவின் 90களில் கலக்கிய கதாநாயகிகளில் மிகவும் முக்கியமானவர். ரஜினி, கமல், பிரபு, கார்த்தி என அப்போதை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். அதேபோல் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை தொடர்ந்து கொடுத்து அதில் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் அனந்திதா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் இணைந்து அவ்னி ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

குஷ்பு - சுந்தர் சி: தமிழ் சினிமாவில் இருக்கும் மிகவும் மகிழ்ச்சியான குடும்பத்தில் இவர்களின் குடும்பமும் ஒன்று. குஷ்பு தொடர்ந்து தனது அரசியல் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். அவருக்கு பக்கபலமாக இருக்கிறார் சுந்தர் சி. அதேபோல் சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டிலுமே கவனம் செலுத்தி வருகிறார். அப்படிப் பார்க்கையில் சுந்தர் சிக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறார் குஷ்பு. என்னதான் இந்தியா முழுவதும் குஷ்புவுக்கு அரசியல் வேலைகள் இருந்தாலும் குடும்பத்திற்கான நேரத்தை அவர் ஒதுக்கிக் கொடுத்து வருகிறார். அதேபோல் உலகம் முழுவதும் படபிடிப்புக்கு சென்றாலும் சுந்தர் சி தனது குடும்பத்திற்கு ஏற்ற வகையில் நேரத்தை ஒதுக்கி கொடுக்கிறார்.
குடும்பம்: இப்படி இருக்கையில் சுந்தர் சி மற்றும் குஷ்பு தங்களது 26 வது திருமண நாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை குஷ்பு தொடர்ந்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதைப் பார்த்த பலரும் அவர்களுக்கு திருமண வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பலர் இவர்களைப் போல திருமண வாழ்க்கையை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், குடும்பத்தை இது போல கொண்டாட வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











