Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒரே பொண்டாட்டி.. நம்பித்தான் ஆகணும்.. குஷ்பு எதுக்கு இப்படியொரு ட்வீட் போட்டிருக்காரு தெரியுமா?
சென்னை: ஒரே பொண்டாட்டி நம்பித்தான் ஆகணும் என மீம் ஒன்றுக்கு நடிகையும் அரசியல் பிரபலமுமான குஷ்பு போட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வைத்து ஏகப்பட்ட மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில், அப்படியொரு மீமை குஷ்புவுக்கே டேக் செய்து நெட்டிசன் ஒருவர் போட்ட கமெண்ட்டுக்கு பதில் சொல்லி உள்ளார் குஷ்பு.
22வது
திருமண
நாளிலும்
எவ்ளோ
ரொமான்ஸ்
பாருங்க..
சுந்தர்
சிக்கு
சூப்பராக
வாழ்த்து
சொன்ன
குஷ்பு!

ஸ்லிம்மான குஷ்பு
நடிகை குஷ்பு தனது உடல் எடையை தீவிர உடற்பயிற்சிகளின் மூலம் வெகுவாக குறைத்து சமீப காலமாக செம யங்காக ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு இணையத்தை அலற விட்டு வருகிறார். ஜீன்ஸ் பேன்ட், கண்கவர் கவர்ச்சி உடை என குஷ்புவின் அழகு கூடிக் கொண்டே போக ஏகப்பட்ட மீம்களும் அதிகளவில் குஷ்புவின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்டு வருகின்றன.

சுந்தர் சி கூட நம்பமாட்டார்
இந்நிலையில், சமீபத்தில் பெரிய சைஸ் மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்த ஒரு புகைப்படத்தை பார்த்த மீம் கிரியேட்டர் ஒருவர், "இது குஷ்புன்னா சுந்தர் சி கூட நம்ப மாட்டார் டா" என வடிவேலுவின் மீம் போட்டு கிண்டல் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் குஷ்புவுக்கே ட்வீட் செய்து இதைப்பத்தி உங்கள் கருத்து என்ன எனக் கேட்டுள்ளார்.

ஒரே பொண்டாட்டி
அந்த மீமை பார்த்ததும் "ஹாஹாஹா.. ஒரே பொண்டாட்டி.. நம்பித்தான் ஆகணும்" என ஏகப்பட்ட ஸ்மைலிக்களை போட்டு நடிகை குஷ்பு போட்டிருக்கும் ட்வீட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குஷ்புவின் இந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்களும், நெட்டிசன்களும் பல விதமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

அழகு கூடிட்டே போகுது
"அதுவும் வருடா வருடம் அழகு கூடிகொண்டே போகும் ஒருவர் தனக்கு பொண்டாட்டி என்பதால் கட்டாயம் நம்பித்தான் ஆகனும் அக்கா" என்று குஷ்புவை வர்ணித்தும், இப்படி நல்லாவே இல்லை.. பழைய குஷ்புவா வாங்கன்னு கோரிக்கை வைத்தும் குஷ்புவை ட்ரோல் செய்தும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.