Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாழ்க்கை ரொம்ப கொடுமையானதா இருக்கே.. மீனாவுக்கு என்ன ஆறுதல் சொல்வேன்.. கதறி அழுத குஷ்பு!
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து பலரும் மீனாவின் கணவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்ட் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மீனா
கணவர்
மரணம்..போனில்
அழைத்து
ஆறுதல்
கூறிய
ரஜினிகாந்த்

விஜய் ரசிகர்கள் இரங்கல்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மீனாவுக்கும் அவரது அன்பு மகள் நைனிகாவுக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நைனிகா அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு அஞ்சலி
காலையில் எழுந்தவுடன் இப்படியொரு சோக செய்தியை கேட்க நேரிட்டதே, வாழ்க்கை இவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லையே.. மீனாவுக்கும் அவரது மகள் நைனிகாவுக்கும் என்ன ஆறுதல் சொல்வேன். சாகர் இன்று நம்முடன் இல்லை என்பது ரொம்பவே வருத்தமளிக்கிறது என கண்ணீர் எமோஜியை போட்டு நடிகை குஷ்பு உருக்கமான இரங்கல் பதிவை பதிவிட்டுள்ளார்.

கொரோனாவால் இறக்கல
நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டார். நீண்ட நாட்களாகவே அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வந்தது. ஆனால், தற்போது அவர் கொரோனாவால் இறக்கவில்லை. தேவையில்லாத பீதியை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் நடிகை குஷ்பு இன்னொரு ட்வீட் போட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டாமை முதல் அண்ணாத்த வரை
நடிகை மீனாவும் குஷ்புவும் இணைந்து வெகு சில படங்களிலேயே நடித்தாலும், ரசிகர்கள் மத்தியில் அந்த படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளன. நாட்டாமை படத்தில் அண்ணன் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்புவும் தம்பி சரத்குமாருக்கு ஜோடியாக மீனாவும் நடித்திருப்பார்கள். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் இருவரும் செய்த அட்ராசிட்டி ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

கலா மாஸ்டர்
மீனா மற்றும் குஷ்புவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் அதிகாலையிலேயே மீனாவின் வீட்டுக்கு சென்று அனைத்து உதவிகளையும் இறுதிச்சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை மீனாவுக்கு தொடர்ந்து திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.