அச்சச்சோ குஷ்பு தலைக்கு என்னாச்சு?.. புதிய லுக்கில் வித்தியாசமா இருக்காங்களே.. வியப்பில் நடிகைகள்!

சென்னை: நடிகை குஷ்பு திடீரென தனது ஹேர்ஸ்டைலை மாற்றி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாற்றம் ஒன்றே மாறாதது என கேப்ஷன் கொடுத்து இருப்பதை பார்த்த சக நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீண்ட தலைமுடியுடன் செம அழகாக ரசிகர்களுக்கு காட்சி தந்து வந்த நடிகை குஷ்பு திடீரென தனது முடியை ஷார்ட்டாக கட் செய்துக் கொண்டது போல இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

Khushbu Sundar new hairstyle and look stuns co actress

குஷ்பு அடுத்த சீரியலுக்கான தோற்றமா? அல்லது ஏதாவது படத்தில் இந்த கெட்டப்பில் நடிக்கப் போகிறார்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நியூ லுக்கில் குஷ்பு: நீண்ட கூந்தலுடன் ரசிகர்களுக்கு போட்டோவாக இன்ஸ்டாகிராமில் போட்டு வந்த நடிகை குஷ்பு திடீரென ஷார்ட் ஹேர் லுக்கில் அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளார். குஷ்புவின் தலைமுடிக்கு என்ன ஆகிடுச்சு என்றும் புதிய படத்துக்கா இந்த லுக் என்றும் ரசிகர்கள் மற்றும் நடிகைகள் கமெண்ட் பக்கத்தில் விசாரித்து வருகின்றனர்.

நடிகைகள் கமெண்ட்: நடிகை குஷ்புவின் புதிய கெட்டப்பை பார்த்த நடிகை கனிகா தாயம் என கமெண்ட் போட்டுள்ளார். நடிகை மாளவிகா லுக்ஸ் சூப்பர் கிளாஸி அண்ட் சிக் என பதிவிட்டுள்ளார். நடிகை ராஷ்மி கவுதம் இது ஜோக் தானே மேடம் என கேட்டுள்ளார். மேலும், பல ரசிகர்களும் குஷ்புவின் புதிய தோற்ற புகைப்படங்களை ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

Khushbu Sundar new hairstyle and look stuns co actress

விக் வச்சிருக்காங்களா: குஷ்பு ஹேர் கட் பண்ணிட்டாரா என பலரும் வியப்புடன் பார்த்து வந்தாலும், அவர் இருக்கும் இடம் ஒரு விக் ஷாப் போல தெரிவதால், குஷ்பு சலூனில் இல்லை என்றும் ஹேர் கட் பண்ணாமல் விக் வைத்து இந்த லுக்கிற்கு மாறியிருக்கிறாரா என்கிற சந்தேகங்களையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

எப்படி இருந்தாலும் குஷ்பு அழகு தான் என ரசிகர்கள் அவரது புதிய தோற்றத்தின் அழகை வர்ணித்து வருகின்றனர். குஷ்பு வெளியிட்ட போட்டோக்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் அதிகளவில் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X