2 சிங்கக் குட்டிகளுடன் பெண் சிங்கம்.. குஷ்பு போட்ட பதிவு.. ஆர்த்தி ரவிக்கு பெருகும் ஆதரவு!
சென்னை: ஜெயம் ரவி என ரசிகர்கள் பல ஆண்டுகளாக கொண்டாடி வந்த நடிகர் தனது மகனையும் தன்னுடன் டிக் டிக் டிக் படத்தில் "குறும்பா" என கொஞ்சி நடித்ததை பார்த்து வியந்து போனார்கள். பூமியில் கடத்தப்பட்டு இருக்கும் மகனை காப்பாற்ற விண்வெளியில் போராடும் அப்பாவாக நடித்து அசத்தியிருந்தார் ஜெயம் ரவி.
ஆனால், தற்போது உண்மையில் 2 மகன்களை காப்பாற்ற போராடிக் கொண்டிருப்பது அம்மா ஆர்த்தி ரவி தான் என்பதை அறிந்த பலரும் ரவி மோகனாக மாறிய ஜெயம் ரவிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக நடிகை குஷ்பு தனது முழு ஆதரவையும் ஆர்த்தி ரவிக்கு வழங்கி வருகிறார். சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் சிங்கம் தனது 2 ஆண் சிங்கங்களை பாதுகாத்து வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஆர்த்தி ரவியின் போராட்டத்தையும் அவர் அனுபவிக்கும் வலிகளையும் எடுத்து கூறியுள்ளார்.
ஏமாற்றிய ரவி மோகன்: கடைசி வரைக்கும் உன்னுடனே வாழ்வேன் என அக்னி சாட்சியாக திருமணம் செய்துக் கொண்டு 14 வயதில் ஒரு மகன் மற்றும் 10 வயதில் ஒரு மகன் இருக்கும் போது இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக மனைவியை விவாகரத்து செய்து பிரிய அவசர அவசரமாக ரவி மோகன் ஆர்வம் காட்டிய நிலையில், தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தனக்கு அளித்த சத்யத்தை மீறி விட்டதாகவும், தன்னை விட்டுப் பிரிந்தால் கூட பரவாயில்லை. 2 குழந்தைகளுக்கு அவர் எப்போதுமே தந்தை தானே அந்த கடமையில் இருந்து எப்படி மீற மனம் வந்தது என ஆர்த்தி ரவி எழுப்பிய கேள்விகள் பலரது மனங்களை தைத்துள்ளது.
கெனிஷாவுடன் திருமணத்தில்: சமீபத்தில் நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணம் கிராண்டாக நடைபெற்றாலும் ஊரே அந்த திருமணத்தில் தனது தோழியான கெனிஷா ஃபிரான்சிஸ் உடன் ரவி மோகன் ஜோடி போட்டு வந்ததை பார்த்து தான் பேசி வருகிறது. திருமணம் மற்றும் திருமண வரவேற்பில் ஜோடியாக இருவரும் வந்ததை பார்த்து அங்கே வந்த பிரபலங்களான குஷ்பு, ராதிகாவே காண்டாகி விட்டனர். வீட்டில் டிவி மற்றும் மொபைல் மூலமாக வீடியோக்களை பார்த்து அப்செட்டான ஆர்த்தி ரவி அன்று மாலையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் தனது பக்க சோகக் கதையை சொல்லும் விதமாகவும் பதிவிட்ட போஸ்ட் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டது.
பெண் சிங்கம் போஸ்ட் போட்ட குஷ்பு: ரவி மோகன் ஆர்த்தி ரவியை பிரிந்து விட்டு கெனிஷாவை திருமணம் செய்துக் கொள்ளும் முடிவில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஆர்த்திக்கு தேவையான நீதி கிடைக்க வேண்டும் என குஷ்பு தொடர்ந்து அவருக்கு ஆதரவாக போஸ்ட்களை போட்டு வருகிறார். சற்று முன் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் சிங்கம் ஒன்று இரண்டு ஆண் சிங்கக் குட்டிகளை பாதுகாத்து வைத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு, வெளியே தெரியாத ரணங்களால் ஒரு தாய் படும் துயருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என பதிவிட்டுள்ளார். இந்த போராட்டத்தை அவளுக்காக அவள் செய்யவில்லை. அவளுக்கு அளிக்கப்பட்ட சத்யம் என்ன ஆனது என்கிற வாதத்தையே எழுப்பி வருகிறாள் என ஆதரவு பதிவை போட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நடிகை சமந்தா நிலைமையும் இதே தான் என்றும் காதல், திருமணம் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் போல என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











