என்னையும் என் திறமையையும் நம்பியவர்.. இயக்குநர் பி. வாசு பிறந்தநாள்.. வாழ்த்து சொன்ன குஷ்பு!
சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ வெள்ளி விழா படங்களை கொடுத்த இயக்குநர் பி. வாசுவின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சின்னத்தம்பி, மன்னன் உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பி. வாசு படத்தில் நடித்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பி. வாசுவை வாழ்த்தி உள்ளார்.
பி. வாசுவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் சினிமா ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இயக்குநரான மேக்கப் மேன் மகன்
1955ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிறந்தவர் இயக்குநர் பி. வாசு. எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆருக்கு மேக்கப் மேனாக இருந்த பீதாம்பரம் நாயரின் மகன் தான் பி. வாசு. மேக்கப் மேனின் மகன் தமிழ் சினிமாவின் வெள்ளி விழா இயக்குநராக தனது விடா முயற்சியால் வளர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்!

சின்னத்தம்பி
1991ம் ஆண்டு இளைய திலகம் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி நடிப்பில் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சின்னத்தம்பி. அந்த படத்தை இயக்கி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் இயக்குநர் பி. வாசு. அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மன்னன், உழைப்பாளி படங்களை இயக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து இயக்க அவருக்கு பெற்றுத் தந்தது.

குஷ்பு வாழ்த்து
பி. வாசு இயக்கத்தில் குஷ்பு நடித்த சின்னத்தம்பி படம் நடிகை குஷ்புவின் சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதனை இப்போதும் அவர் மறக்கவில்லை. இயக்குநர் பி. வாசுவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் பிரபு மற்றும் பி. வாசு உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

திறமைக்கு மரியாதை
மேலும், தனது சினிமா வாழ்க்கையை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வடிவமைத்தவர். சிலர் தன்னை ஒதுக்கிய நேரத்தில், தனது திறமையை நம்பி, தன்னால் அந்த கதாபாத்திரத்தை திறம்பட செய்ய முடியும் என நம்பிய ஒருவர் என இயக்குநர் பி. வாசுவை இந்த சூப்பரான தருணத்தில் நினைத்து பாராட்டி உள்ளார் குஷ்பு.
Recommended Video

சந்திரமுகி 2
ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு நடிப்பில் வெளியான சந்திரமுகி, படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சந்திரமுகி 2ம் பாகத்தை ராகவா லாரன்ஸை வைத்து இயக்க இயக்குநர் பி. வாசு முடிவு செய்துள்ளார். அந்த படம் எப்போ வரும் எப்படி வரும், சந்திரமுகி யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சீக்கிரமே சொல்லிடுங்க பி. வாசு சார்!


Click it and Unblock the Notifications











