கொஞ்சம் லேட் தான் ஆனாலும் க்யூட்.. அமீர்கான் மாதிரி இருக்கீங்க.. ஆணாக மாறிய குஷ்புவின் போட்டோ!

சென்னை: ஆண்களை, பெண்களாகவும், பெண்களை ஆண்களாகவும் மாற்றி சமீபத்தில் FaceApp மூலம் பாலின மாற்று சவால் ஒன்று வைரலானது.

நடிகைகள் நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் எல்லாம் ஆணாக மாறி இருந்தால் எப்படி இருக்கும் என்றும் வெளியான புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், தற்போது நடிகை குஷ்பு தனது போட்டோவை FaceApp மூலமாக மாற்றி அழகான ஆணாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

நான் ஆணாக இருந்தால்

நான் ஆணாக இருந்தால்

நெகட்டிவ் செய்திகளால் சமூக வலைதளங்கள் நிறைந்திருந்தாலும், அப்பப்போ இது போன்ற பாசிடிவிட்டிக்களும், ஃபன் ஆக்டிவிட்டிகளும், நெட்டிசன்களை ரிலாக்ஸ் பண்ணவே வைக்கின்றன. இந்நிலையில், தற்போது நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ஆணாக இருந்தால் கூட, அவ்வளவு மோசமாக இருக்க மாட்டேன்" என்ற கேப்ஷனுடன் தனது பாலின தோற்றத்தை மாற்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அமீர்கான் மாதிரியே

அமீர்கான் மாதிரியே

நடிகை குஷ்புவின் இந்த புகைப்படத்தை பார்த்த மாத்திரத்திலேயே பல நூறு ரசிகர்கள் அவரது ட்விட்டர் பதிவுக்கு கீழ் கமெண்ட்டுகளை கொட்டத் தொடங்கி விட்டனர். நடிகை குஷ்புவின் ஆண் தோற்றத்தை பார்த்த உடனே பலருக்கும் நடிகர் அமீர்கான் தான் நினைவுக்கு வருகிறதாம். அப்படியே அமீர்கான் மாதிரி அழகா இருக்கீங்க என கமெண்ட்டுகள் குவிகின்றன.

கொண்டைய மறைக்கலயே

கொண்டைய மறைக்கலயே

வித விதமா கெட்டப் போட்டாலும், மண்டை மேல இருக்கிற கொண்டைய மறைக்கலயே என போக்கிரி படத்தில் வரும் வடிவேலுவின் காமெடியை போல, இந்த ஃபேஸ் ஆப் புகைப்படத்தில், ஆணாக மாறியிருந்தாலும், நடிகை குஷ்புவின் மூக்கில் உள்ள மூக்குத்தி மறையாததையும் ரசிகர்கள் நோட் பண்ணி கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

V-CONNECT | KHUSHBOO CHAT PART-03 | குஷ்பு கொடுத்த அண்ணாத்த UPDATE | FILMIBEAT TAMIL
ரியலா அல்லது போட்டோஷாப்பா

ரியலா அல்லது போட்டோஷாப்பா

ஃபேஸ் ஆப்பில் புகைப்படத்தை எடிட் செய்து ஆண் போல தோன்றினாலும், குஷ்பு தான் இது என கண்டுபிடிக்கும் அளவுக்கு அவ்வளவு அழகாக அந்த புகைப்படம் இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், இது ரியலா? அல்லது போட்டோஷாப்பா மேடம்.. நீங்க ஹீரோவாகவே நடிக்கலாம் என கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X