38 வருஷம்.. சினிமாவில் கலக்கிய குஷ்பு.. இத்தனை வருஷத்துல எது மாறியிருக்குன்னு கேள்வி!
சென்னை: பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த குஷ்பு 1985ம் ஆண்டு வெளியான ஜானோ படத்தின் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில் கலியுக பாண்டவலு படத்தில் நடித்த குஷ்பு தமிழில் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.
வருஷம் 16, வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், சின்ன தம்பி, மன்னன், சிங்காரவேலன், அண்ணாமலை என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ள நடிகை குஷ்பு சினிமாவில் ஹீரோயினாக நடித்து 38 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டதாகவும் 38 ஆண்டுகளுக்கு முன்னதாக எப்படி இருக்கிறேன் பாருங்க என்றும் ஒரு போஸ்ட்டை வெளியிட்டுள்ளார்.

அந்த குஷ்புவுக்கும் இப்போ இருக்குற குஷ்புவுக்கும் என்ன வித்தியாசம் என்கிற கேள்வியையும் அவர் எழுப்ப ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை எக்கச்சக்கமான கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
சுந்தர். சியுடன் திருமணம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், 2000ம் ஆண்டு சுந்தர். சியுடன் திருமணம் செய்துக் கொண்டார். குஷ்பு மற்றும் சுந்தர் சிக்கு 2 மகள்கள் உள்ளனர். குடும்பத்துடன் ஹேப்பியாக உள்ள குஷ்பு சினிமா, சின்னத்திரை, தயாரிப்பு என அனைத்தையும் தாண்டி அரசியலிலும் தனது ஆளுமையை செலுத்தி வருகிறார்.
38 வருஷம் ஆச்சு: ஆகஸ்ட் 14, 1986ல் இருந்த குஷ்புவுக்கும் 38 வருஷம் கழித்த நிலையில், இப்போதுள்ள குஷ்புவுக்கும் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என கண்டுபிடிங்க என தற்போது குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த போஸ்ட்டுக்கு த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் லைக் போட்டுள்ளனர்.

அறிவும் அழகும் அதிகரித்துள்ளது: அப்போது, எதுவுமே தெரியாத அழகி மட்டுமே தெரிகிறார். ஆனால், தற்போது, அறிவும் அழகும் சேர்ந்த போல்டான பெண்மணியாக மாறிவிட்டீங்க குஷ்பு என பல ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அந்த போட்டோவில் மேக்கப், லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு இருக்கீங்க இப்போ மேக்கப் இல்லா முகமும் அதில் சுருக்கங்களும் தென்படுகின்றன என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

முதல் தென்னிந்திய படம்: நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக தெலுங்கில் வெளியான கலியுக பாண்டவலு படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து நாஸ்டால்ஜியா நினைவுகளை குஷ்பு ஷேர் செய்து வருகிறார். தென்னிந்திய நடிகையாக மாறி 38 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.


Click it and Unblock the Notifications











