உங்க வீட்ல இருந்து யாராவது.. ரஜினிகாந்தை அசிங்கப்படுத்திய ரசிகர்.. குஷ்பு கொடுத்த தரமான பதிலடி!
சென்னை: தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக கண்ணியமான முறையில் சுந்தர். சி இரண்டு மாபெரும் நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்தும் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டும் விலகினார். ஆனால், சுந்தர். சி அறிவிப்பைத் தொடர்ந்து அரண்மனை 5 மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை விட அதிகமான கட்டுக்கதைகள் சோஷியல் மீடியாவில் அரங்கேறி வருகின்றன.
காமெடி மீம்களை தாண்டி சில மோசமான ட்ரோல்கள் எல்லை மீறி குடும்ப நபர்களை அட்டாக் செய்யும் விதமாக பதிவிடப்பட்டு வரும் நிலையில், நடிகை குஷ்பு அதை பார்த்துக் கொண்டு அமைதியாக கடக்காமல் ஒரே போடாக போட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

குஷ்புவை ஐட்டம் டான்ஸ் ஆட ரஜினி கேட்டிருப்பார், அதனால் தான் சுந்தர். சி படத்தில் இருந்து விலகிவிட்டார் என ரொம்பவே அசிங்கமான முறையில் நெட்டிசன் ஒருவர் போட்ட கமெண்ட்டுக்கு குஷ்பு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
விலகிய சுந்தர். சி: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் இயக்குநர் சுந்தர். சி தான் என சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வீடியோ எல்லாம் வெளியிட்டனர். அருணாச்சலம் படத்திற்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி உருவாகிறதே என ரசிகர்கள் "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" என டிரெண்ட் செய்ய, ஹேட்டர்கள் அரண்மனை 5 மீம்களை அடுக்கி வந்தனர். இந்நிலையில், சுந்தர். சி தான் தலைவர் 173 படத்தில் இருந்து விலகுகிறேன் என்பதை ஒரு அறிக்கையின் மூலம் நேற்று தெரிவித்து ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஐட்டம் பாடலுக்கு குஷ்பு: சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து சுந்தர். சி விலகியதில் இருந்து ஏகப்பட்ட கட்டுக்கதைகளும் கன்றாவி ட்ரோல்களும் கிளம்பி வரும் நிலையில், "ஐட்டம் பாடலுக்கு குஷ்புவை ஆட சொல்லியிருப்பானோ" என மிகவும் மோசமான வார்த்தையில் ரஜினிகாந்தை பற்றிய தப்பான போஸ்ட் ஒன்றை நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட நிலையில், உடனடியாக விளாசி எடுத்துள்ளார் குஷ்பு.
உங்க வீட்ல இருந்து: அந்த நபரின் குரூர புத்திக்கு உடனடியாக சவுக்கடி கொடுக்கும் விதமாக "இல்லை.. உங்க வீட்ல இருந்து யாராவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம்" என பதிலடி கொடுத்து பதிவிட்டு இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இந்த விவகாரம் எங்கே போய் முடியப் போகுதோ என தெரியவில்லை என்கின்றனர். ஒருவர் இயக்க விரும்பவில்லை என விலகிய நிலையில், அவரையும் அவரது குடும்பத்தினரையும் நிம்மதியாக விடுவதே சரியான அணுகுமுறை என்றும் தேவையற்ற பர்சனல் அட்டாக்குகள் மற்றும் வன்மம் நிறைந்த மீம்களை நெட்டிசன்கள் தவிர்ப்பது நலம்.


Click it and Unblock the Notifications











