கணவராக இருந்தாலும்.. உடலுறவுக்கு ‘நோ‘ தான்.. இதுக்கு கூட பெண்ணுக்கு உரிமை இல்லையா? குஷ்பு ஆதங்கம்!

சென்னை: திருமணமான ஆண் வயது வந்த பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருப்பது கிரிமினல் குற்றமாகாது என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, இந்த விதி ஆண்களுக்கு மட்டுமானதா அல்லது பெண்களுக்கும் இதே விதி தானா? கேள்வி எழுப்பு உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர், தன் 18 வயது மகளுடன் திருமணமான நேத்ரபால் உறவில் இருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், என் சொந்த விருப்பத்தின்படியே நேத்ரபாலுடன் உறவில் இருப்பதாக நீதிமன்றத்தில் இளம் பெண் தெரிவித்ததை அடுத்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஆண் வயது வந்த பெண்ணின் சம்மதத்துடன் உறவில் இருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றமல்ல என்று தீர்ப்பளித்துள்ளது.

Khushbu Sundar women
Photo Credit:

மனைவி சம்மதம் தேவையில்லை: அடுத்தாக. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மனைவியுடன் இயல்புக்கு மாறான பாலுறவோ அல்லது பாலியல் செயல்களோ பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது என்றும், அத்தகைய சூழலில் மனைவியின் சம்மதம் என்பது ஒரு பொருட்டல்ல. என்று குவாலியர் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த இரண்டு தீர்ப்பு குறித்து நடிகை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு: அதில், இந்த இரண்டு செய்திகளும் இன்று தலைப்புச் செய்திகளாகியுள்ளன. மேலும், இது மிகவும் மன வருத்தத்தையும், ஏமாற்றத்தையும், பிற்போக்குத்தனத்தையும் அளிக்கிறது. நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்தின் மீது எனக்குள்ள முழு மரியாதையுடன் கேட்கிறேன். இது பெண்களுக்கு வழங்கப்பட்டால், பெண்கள் எங்கிருந்து நீதியைத் தேடுவார்கள் என்று நான் உண்மையிலேயே வியக்கிறேன். ஒரு பெண்ணுக்கு, இயற்கையாகவே அல்லது செயற்கையாகவோ உடலுறவுக்கு 'வேண்டாம்' என்று சொல்ல உரிமை உண்டு. அவள் 'வேண்டாம்' என்று சொன்னால், அது 'வேண்டாம்' தான். அதை ஆண்கள் மதிக்க வேண்டும். கட்டாயப்படுத்தி நடத்தப்படும் எதுவும் பாலியல் வன்புணர்வாகவே கருதப்பட வேண்டும்.

பெண்களுக்கும் பொருந்துமா?: திருமண வாழ்வில் கூட இது பொருந்தும். ஆனால், திருமணமான ஒரு ஆண், திருமணமான நிலையில் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது சரியா? இப்போது, ​​இந்த விதி ஆண்களுக்கு மட்டுமானதா அல்லது பெண்களுக்கும் இதே விதி தானா? இது சட்டப்படி சரி என்றால், பிறகு ஏன் திருமணம் செய்ய வேண்டும்? பெண்களுக்கு வழங்கப்படும் நீதியின் மீது சட்டங்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் அனுதாபத்தை எதிர்பார்க்கலாம். சட்டங்கள் அவளது கண்ணியத்தையும் நேர்மையையும் பாதுகாக்க வேண்டும் என குஷ்பு தனது மன வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X