AR Rahman Concert - ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்..குஷ்பூவின் மகளுக்கும் அந்த நிலைமைதானாம்..இது வேற நடந்திருக்கா?
சென்னை: AR Rahman Concert (ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்) ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட் குறித்து குஷ்பூ ட்வீட் செய்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் உள்நாடு, வெளிநாடு என இசை கச்சேரி நடத்துபவர். அந்த கச்சேரிகளுக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுப்பார்கள். அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 முறை இசை கச்சேரியை நடத்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதேபோல் தமிழ்நாட்டிலும் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்தியிருக்கிறார்.

மறக்குமா நெஞ்சம்: ரஹ்மான் சினிமாவுக்குள் வந்து 30 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து மறக்குமா நெஞ்சம் என்ற கான்செர்ட் நடத்தினார். ஆகஸ்ட் 12ஆம் தேதி நடப்பதாக இருந்த நிகழ்ச்சி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு கடந்த பத்தாம் தேதி நடைபெற்றது. ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் புதிய டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
சர்ச்சை: ஆனால் அளவுக்கதிகமாக கூட்டம் சேர்ந்ததால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டிக்கெட் வாங்கிய பலர் நிகழ்ச்சி நடந்த ஆதித்யாராம் மைதானத்திற்குள்ளேயே செல்ல முடியாமல் திணறினர். இரண்டு கிலோமீட்டர் தூரம் அளவுக்கு வரிசையில் நின்றனர் ரசிகர்கள். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் கார்கூட அந்த நெரிசலில் சிக்கிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட சொதப்பல்கள் கடுமையான கண்டனத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது.
மன்னிப்பு: இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஏசிடிசி நிறுவனம் மன்னிப்பு கோரியது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் டிக்கெட் நகலை அனுப்புங்கள் உரிய ரெஸ்பான்ஸ் செய்யப்படும் என்ற தொனியில் ட்வீட் செய்திருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானே பலி ஆடு ஆகிறேன் என விரக்தியுடன் பதிவிட்டிருந்தார்.
ரஹ்மானுக்கு சப்போர்ட்: ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானின் விளக்கம் போதிய திருப்தியை தரவில்லை என அடுத்தக்கட்ட பஞ்சாயத்து ஆரம்பித்தது. சூழல் இப்படி இருக்க இசையமைப்பாலர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, ரஹ்மானின் மகள் கதீஜா உள்ளிட்டோர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். அதிலும் கதீஜா தனது தந்தை ஒன்றும் ஊழல்வாதி இல்லை என சாட்டையை சுழற்றியிருக்கிறார்.
குஷ்பூ ட்வீட்: இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில், "ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்டில் அவரது ரசிகர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து கேள்விப்பட்டேன். அவர் எப்போது தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக்கொள்வார். டைமண்ட் பாஸ்ஸ் இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டவர்களில் எனது மகளும் ஒருவர். அந்த இடத்தை அடைய அவருக்கு மூன்று மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு பொறுப்பேற்க முடியாது" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











