நெக்ஸ்ட் ரெஸ்ட்… குஷ்பு அறிவிப்பு

By Mayura Akilan

நடிகை, திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடுவர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்ட குஷ்பு சில மாதங்கள் ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து குஷ்பு விலகியபின்னர் அவரது அரசியல் பயணம் எந்தக் கட்சியில் தொடரும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் அதைப்பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அரசியலில் இருந்து விலகினாலும் அவரது சீரியலும், நடுவராக இருக்கும் நிகழ்ச்சியிலும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. எனவே அரசியல் வேறு தொழில் வேறு என்பதில் குஷ்பு தெளிவாக இருக்கிறார் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் தான் தன்னுடைய வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. கொஞ்சம் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று அறிவித்துள்ளார் குஷ்பு.

சினிமா, சீரியல்

சினிமா, சீரியல்

சினிமாவில் நடித்த போதே சீரியலில் பிரபலமானவர் குஷ்பு. தானே சீரியல் தயாரிப்பதோடு, நடன நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றினார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

நிகழ்ச்சி தொகுப்பாளர்

அதோடு மட்டுமல்லாது பிரபல சேனல்களின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், விவாத நிகழ்ச்சியின் நடுவராகவும் பரபரப்பாக காணப்பட்டார்.

அரசியல் களம்

அரசியல் களம்

சின்னத்திரை தொகுப்பாளரான குஷ்பு 2010ஆம் ஆண்டு அப்போதய ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்தார். ஆனால் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளினால் அவர் அங்கிருந்து விலக நேரிட்டது.

உற்சாக குஷ்பு

உற்சாக குஷ்பு

அரசியலை விட்டு விலகினாலும் திரைப்பட நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என உற்சாகமாகவே வலம் வந்தார் குஷ்பு.

தொடர்ந்த சீரியல்

தொடர்ந்த சீரியல்

திமுகவில் இல்லை என்றாலும் அந்த கட்சி தொலைக்காட்சியில் குஷ்புவின் நெடுந்தொடர் தொடர்ந்து ஒளிபரப்பாகிவருகிறது.

மீண்டும் சினிமாவில்

மீண்டும் சினிமாவில்

இந்த நிலையில் குஷ்பு மீண்டும் சினிமாவில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தான் சிலகாலம் ஓய்வெடுக்கப் போவதாகவும், தன்னுடைய அடுத்த நகர்வு பற்றி பின்னர் அறிவிப்பேன் என்றும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சில ஐடியா இருக்கு

சில ஐடியா இருக்கு

என்னுடைய அடுத்த திட்டம் என்ற என்று யாரும் கேட்காதீர்கள், தற்சமயம் என்னுடைய பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டேன். இப்போதைக்கு நான் ஓய்வெடுக்கப் போகிறேன். அடுத்ததாக சில திரைப்படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார் குஷ்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X