வாழ்க்கை ஒரு வட்டம்: கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்த குஷ்பு

By Siva

சென்னை: மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் குஷ்பு.

பெரிய திரை மூலம் பிரபலமான குஷ்பு அரசியல் பக்கம் போனார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்கலாமா, வேண்டாமா என்று ரசிகர்களிடம் ட்விட்டரில் கேட்டார்.

Khushbu to resume acting in movies

அவரின் ட்வீட்டை பார்த்தவர்கள், மேடம் நீங்கள் கண்டிப்பாக மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்றனர். தனக்கு இப்படி அமோக ஆதரவு இருப்பதை பார்த்த குஷ்பு மீண்டும் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார்.

மீண்டும் நடிக்க வந்தாலும் வெயிட்டான கதாபாத்திரங்களில் தான் நடிப்பாராம். மேடம் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம் என்று அவரின் தீவிர ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நெட்ஃபிளிக்ஸ் படங்களில் நடிக்குமாறும் கோரிக்கை விடுத்துளனர். சிலரோ, ராதிகா சரத்குமார் போன்று நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளனர். அவர் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் குறித்து ரசிகர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

சிலரோ, மீண்டும் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துவிட்டு எங்களிடம் கருத்து கேட்பது போன்று ஏன் இந்த டிராமா. இது உங்களின் வாழ்க்கை. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். அடுத்தவர்களுக்காக வாழ முடியாது. அரசியலை விட உங்களுக்கு சினிமா தான் செட்டாகும். மீண்டும் ஒரு பெரிய ரவுண்டு வர வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ, சின்னத்திரையோடு முடங்கிக் கிடந்த குஷ்பு பெரிய திரைக்கு வருவது என்று முடிவு செய்ததை அவரின் ரசிகர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டனர். மீண்டும் அவருக்கு கோவில் கட்டுகிறேன் என்று கிளம்பாமல் இருந்தால் சரி.

குஷ்பு சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதை பார்க்கும் ரசிகர்களோ, என்ன மேடம் உங்களுக்கு மட்டும் வயசே ஆகவில்லை. அப்படியே இருக்கிறீர்களே, உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று பல நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். செல்ஃபி எடுப்பதில் குஷ்பு வல்லவர். அழகாக செல்ஃபி எடுப்பது எப்படி என்று அவரிடம் பாடம் கற்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X