ரஜினி படத்துக்கு நோ.. சமாதானப்படுத்த வந்த குஷ்பூ?.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட சுந்தர்.சி?.. ரொம்ப கறார்
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை இயக்கு வாய்ப்பினை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் சுந்தர்.சி. அவர் இப்படத்திலிருந்து வெளியேறியதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட சுந்தர் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டார். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் தேனி கண்ணன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக முதலில் தகவல்கள் பரவின. ஆனால் அந்தப் படம் லேட்டாக ஆரம்பிக்கப்படும் என்றும் முதலில் ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிப்பார் என்று சொல்லியும் சுந்தர்.சியை இயக்குநராக கமிட் செய்தார்கள். இளம் இயக்குநர்கள் வரிசையாக ரஜினிக்கு சொதப்பலான படங்களை கொடுப்பதால் சீனியர் இயக்குநருடன் இணைந்தார் சூப்பர் ஸ்டார்.
மறுத்துவிட்ட சுந்தர்: சுந்தர்.சியும் ஹிட் படம் கொடுக்கக்கூடிய இயக்குநர்தான் என்பதால் ரசிகர்கள் முதலில் அவரது பெயர் அறிவித்தபோது கொஞ்சம் முணகினாலும் போகப்போக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் திடீரென ட்விஸ்ட்டாக இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். ரஜினி - கமல் இணையும் படத்தில் பணியாற்ற அனைவருமே ஏங்கிக்கொண்டிருக்க இவர் வெளியேறியது ஆச்சரியத்தை கொடுத்தது.

என்ன காரணம்?: அவரது இந்த விலகலுக்கு பலரும் பலவித காரணங்களை சொல்கிறார்கள். முதலில் இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவாக்க சுந்தர் விரும்பியதாகவும்; அதற்கு கமல் ஒத்துவராததால் இந்த வெளியேற்றம் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மையான காரணம் இல்லை. சுந்தர்.சி சொன்ன கதை பிடிக்காததால்தான் அவருக்கு பதிலாக வேறு இயக்குநரை ஃபிக்ஸ் செய்யும் சூழல் உருவானதாகவும் பேச்சுக்கள் ஓடுகின்றன.
கமலின் பேட்டி: இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 'இந்தப் படத்துக்கு நான் ஒரு முதலீட்டாளன். எனது நட்சத்திரத்துக்கு பிடித்த கதையை படமாக ஆக்குவதுதான் ஆரோக்கியமான ஒன்று. ரஜினிக்கு கதை பிடிக்கும்வரை கேட்டுக்கொண்டே இருப்போம். கதை பிடித்திருந்தால் இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு உண்டு. நானும் அவரும் சேர்ந்து நடிக்கும் படத்துக்கான கதையையும் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.
தேனி கண்ணன் பேட்டி: இந்நிலையில் சுந்தர்.சி வெளியேறியது குறித்து பிரபல பத்திரிகையாளர் தேனி கண்ணன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறியதை பார்த்துவிட்டு அவரிடம் குஷ்பூ, 'இது நமக்கு பெரிய வாய்ப்புதானே. இதை இயக்கலாமே' என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுந்தரோ, 'இது என்னுடைய பிரச்னை. இதில் நீ தலையிட வேண்டாம்' என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார். அதனால்தான் சுந்தரின் அறிக்கையை முதலில் ஷேர் செய்துவிட்டு குஷ்பூ டெலிட் செய்துவிட்டார்.
தனித்த உரையாடல்: அதுமட்டுமின்றி உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள். இந்தப் படத்தை செய்தால் மேற்கொண்டு செய்யலாமே என்றும் சொல்லியிருக்கிறார். அதற்கு சுந்தரோ, 'எனது உதவி இயக்குநர்களுக்கு செய்வது எனது தனிப்பட்ட விஷயம். இதற்காக அந்தப் படத்தில் ஒர்க் செய்ய முடியாது. எனக்கு பிடிக்காமல் அங்கு சென்று ஒர்க் செய்வது சரியாக இருக்காது என கூறிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











