4 மாதங்களுக்கு பிறகு ஆபிஸ் போகும் குஷ்பு.. மாஸ்க்கு கூட மேட்சிங்தான்.. அசத்தல் செல்பி!
சென்னை: நடிகை குஷ்பு சேலைக்கு மேட்சாக மாஸ்க் அணிந்து தனது ஆபிஸ்க்கு செல்லும் செல்பி போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை குஷ்பு, சீரியல், சினிமா, அரசியல் என பிஸியாக உள்ளார். இருந்த போதும் குடும்பத்தில் பொறுப்பான மனைவியாகவும் அன்பான தாயாகவும் தனது கடமையை செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்த நடிகை குஷ்பு அவ்வப்போது தனது செல்பி போட்டோக்களை ஷேர் செய்து வந்தார்.
அதோடு தனது கணவர் எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்து கிறங்க வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 மாதங்களுக்கு பிறகு நடிகை குஷ்பு தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
காரில் செல்லும் போது செல்பி எடுத்துள்ளார் குஷ்பு. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தனது சேலைக்கு மேட்சாக மாஸ்க் அணிந்துள்ளார்.

கலரிங் செய்யப்பட்ட ஃபிரி ஹேரில், நெற்றியில் வகுட்டில் என பொட்டு வைத்து மங்களகரமாக நான்கு மாதங்களுக்கு பிறகு ஆபிஸ் சென்றுள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பாதி முகத்தை காட்டினாலும் அழகு அப்படியேதான் இருக்கிறது என புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











