எங்கேயும் எப்போதும் அம்மா... அம்மா ஸ்ரீதேவியை மிஸ் செய்யும் குஷி கபூர்
மும்பை : மறைந்த நடிகை ஸ்ரீதேவி கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக தன்னை நிலைநிறுத்தியவர்.
தொடர்ந்து தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து மும்பையிலேயே செட்டில் ஆனார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவரது மறைவு அவர்கள் இருவருக்கும் தற்போது வரை துயரத்தை தருவதாக இருவரும் தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பான நடிகை
கோலிவுட்டில் அறிமுகமாகி சிறப்பான பல படங்களை கொடுத்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட்டிலும் தன்னை சிறப்பான நடிகையாக நிலை நிறுத்தியவர். தொடர்ந்து அங்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். பல ஹிட் படங்களை கொடுத்தார்.

2 பெண் குழந்தைகள்
இதையடுத்து பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையிலேய செட்டில் ஆனார். இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவர் உயிரிழந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவரது பெண்கள் அவரை தொடர்ந்து மிஸ் செய்வதாக தெரிவிக்கின்றனர்.

அதிக புகைப்படங்கள் பகிர்வு
அவரது முதல் பெண் ஜான்வி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஆயினும் தன்னுடைய தாயை தான் அதிகமாக மிஸ் செய்வதாக அவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் தெரிவித்து வருகிறார். தாயுடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் அதிகமாக பகிர்ந்து வருகிறார்.
Recommended Video

புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள்
இந்நிலையில் நியூயார்க்கில் படித்துவரும் அவரது இரண்டாவது பெண் குஷி கபூரும் தன்னுடைய தாயுடன் தான் இருக்கும் புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியில் செல்லும்போது பத்திரிகையாளர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர்.
அம்மாவுடன் புகைப்படம்
அதில் அவர் தனது மொபைல் போனில் தன்னுடைய தாயின் தோளில் இருக்கும்படியான புகைப்படத்தை வால்பேப்பராக வைத்துள்ளது தெரியவந்துள்ளது. 3 வருடங்களை கடந்தும் அவர்கள் தனது தாயை தொடர்ந்து மிஸ் செய்து வருவதாக குறிப்பிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அவர் சிறப்பான அம்மாவாக இருந்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











