அம்மா, அக்கா மாதிரி ஆக மாட்டேன்: ஸ்ரீதேவியின் இளைய மகள்
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூருக்கு நடிகையாக விருப்பம் இல்லையாம்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தாய் வழியில் நடிகையாகிவிட்டார். அவர் தடக் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மகளின் முதல் படத்தை பார்க்காமல் ஸ்ரீதேவி சென்றுவிட்டார்.
ஜான்வி தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

ஸ்ரீதேவி
நான் எப்படி அம்மாவை பார்த்து பார்த்து பெருமைப்பட்டேனோ அதே போன்று என் அம்மா என்னை பார்த்து பெருமைப்பட வைப்பேன் என்று ஜான்வி தெரிவித்துள்ளார்.

இளைய மகள்
ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். முன்பு குண்டாக இருந்த அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகிவிட்டார்.

மாடலிங்
குஷிக்கு நடிப்பில் ஆர்வம் இல்லையாம். படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மகள்கள்
4 வயதில் நடிக்கத் துவங்கியதால் தன்னால் படிக்க முடியாமல் போய்விட்டது என்ற வருத்தம் ஸ்ரீதேவிக்கு இருந்தது. அதனால் தனது மகள்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











