அக்கா ஜான்வியை போன்றே அம்மா ஸ்ரீதேவி விரும்பாத விஷயத்தை செய்யத் துடிக்கும் குஷி
மும்பை: ஸ்ரீதேவி விரும்பாத மேலும் ஒரு விஷயம் நடக்கப் போகிறது.
ஸ்ரீதேவி தனது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி தன்னை போன்றே நடிகையாக விரும்பவில்லை. இருப்பினும் மூத்த மகள் ஜான்வி நடிக்க வேண்டும் என்று கூறியபோது ஏற்றுக் கொண்டார்.

இளைய மகள் குஷியோ(17) மாடல் ஆக விரும்பினார். இந்நிலையில் அவருக்கும் நடிகையாகும் ஆசை வந்துள்ளது. இது குறித்து ஸ்ரீதேவியின் கணவரும், படத் தயாரிப்பாளருமான போனி கபூர் கூறியதாவது,
முதலில் மாடல் ஆக விரும்புவதாக கூறி வந்த குஷியின் மனம் மாறிவிட்டது. தற்போது நடிகையாக விரும்புகிறார் என்றார். ஜான்வி நடித்த முதல் படமான தடக் கடந்த வாரம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் ஜான்வியின் நடிப்பை பாராட்டியுள்ளனர். பலரும் ஜான்வியை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டுப் பார்த்து விமர்சனம் செய்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications