பாலிவுட்டைக் கலக்கும் கியாரா அத்வானி..!
சென்னை: கியாரா அத்வானி இந்தி திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து.மீண்டும் பாலிவுட்டுக்கு சென்று தற்போது பாலிவுட்டையே கலக்கி கொண்டு வருகிறார்.
இவரது இயற்பெயர் அலியா அத்வானி. தனது முதல் திரைப்படம் நடித்த பிறகு தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார். அஞ்சனா அஞ்சனி படத்தில் பிரியங்கா சோப்ராவின் பெயர் கியாரா. அப்பெயர் இவருக்கு மிகவும் பிடித்து போக தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார்.

கியாரா அத்வானி என்ன தான் 2014 ஆண்டு அறிமுகமானலும் அவரை எல்லா மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த படம் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.ஸ். தோனி தி அன் டோல்டு ஸ்டோரி தான். பின்பு 2018 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அங்கே இரண்டு படங்களில் நடித்தார் பின் மீண்டும் பாலிவுட்டிற்கே சென்றுவிட்டார்.
கடைசியாக அவர் நடித்த திரைப்படம் தெலுங்கில் பெறும் வெற்றி பெற்று. இப்பொழுது மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரும் அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாத் கப்பூர் உடன் இணைந்து நடித்தார். அப்படம் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளங்கள் உருவாக்கியது.இந்தியில் தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளார்.

கிறிஸ்துமஸ் புத்தாண்டு என்று வரிசையாக விடுமுறை வந்துள்ளதால் நடிகைகள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களுடன் புகைப்படங்களை வெளியிடுகின்றனர். இதன் தொடர்ச்சியாக கியாரா அத்வானி தன் பங்கிற்கு கேக் போன்ற அடுக்கு அடுக்காக இருக்கும் ஒரு உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் கேக் நடுவில் கியாரா அத்வானியை நிற்க வைத்தது போல் உள்ளது இந்த புகைப்படம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











