Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீண்டும் காலண்டர் போட்டோஷூட்டுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்!
மும்பை: எம்.எஸ். தோனி பயோபிக் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கியரா அத்வானி.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்களில் இவர் தான் நாயகி என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சீரியல் நடிகர் சஞ்சீவுக்கும் வனிதாவுக்கும் உள்ள உறவு தெரியுமா? போட்டோவால் வெளி வந்த உண்மை!
இந்நிலையில், மீண்டும் ஒரு காலண்டர் போட்டோஷூட்டுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையவாசிகளை அதிர வைத்துள்ளார்.
லஸ்ட் ஸ்டோரீஸ்
நெட்பிளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான லஸ்ட் ஸ்டோரீஸ் நடிகை கியாரா அத்வானியை உலகளவில் பிரபலமாக்கியது. அந்த ஆந்தாலஜியில் டீச்சராக நடித்திருந்த கியாரா அத்வானி வைப்ரேட்டரை பயன்படுத்தும் காட்சி பாலிவுட் ரசிகர்களை பதற வைத்தது.
இலை மறைவில்
பிரபல இந்திய புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி ஆண்டு தோறும் பிரபலங்களின் காலண்டர் போட்டோஷூட்டை நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு அவர் நடத்திய காலண்டர் போட்டோஷூட்டில் நடிகை கியாரா அத்வானி ஆடையேதும் அணியாமல் நிர்வாணமாக இலைகளை மட்டுமே வைத்து தனது முக்கிய பாகங்களை மறைத்தபடி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணையத்தையும் தெறிக்க விட்டிருந்தார்.
மீண்டும் நிர்வாணமாக
இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான கிட்டத்தட்ட 6 மாதங்கள் போன பிறகு காலண்டர் போட்டோஷூட்டை தபு ரத்னானி நடத்தி உள்ளார். அதில் இடம்பெற்ற தனது நிர்வாண கோல போட்டோவை தற்போது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். மணல் மேல் படுத்துக் கொண்டு அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
13 லட்சம் பேர்
பாலிவுட்டின் லேட்டஸ்ட்டான ஹாட் பாம் நடிகையான கியாரா அத்வானியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அவர் தற்போது வெளியிட்டுள்ள நிர்வாண புகைப்படத்தை சில மணி நேரத்திலேயே 13 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து லைக் செய்து வருகின்றனர்.
வாவ் சொன்ன ஆலியா
ரசிகர்கள் மட்டுமின்றி ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் கியாரா அத்வானியின் இந்த கிளுகிளுப்பான புகைப்படத்தை ரசித்து வருகின்றனர். நடிகை ஆலியா பாட் இந்த புகைப்படத்தை பார்த்து Wowza என கமெண்ட் செய்துள்ளார். புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி absolute beauty என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
ஷங்கர் படங்களில்
கடந்த ஆண்டு தீபாவளிக்கு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான காஞ்சனா இந்தி ரீமேக் திரைப்படமான லக்ஷ்மி படத்தில் நடித்திருந்தார் கியாரா அத்வானி. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட படம் மற்றும் ரன்வீர் சிங்கை வைத்து இயக்கவுள்ள அந்நியன் ரீமேக் படத்தில் சதா நடித்திருந்த நந்தினி கதாபாத்திரத்திலும் கியாரா தான் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.