அடக்கடவுளே.. பிரபல நடிகருடன் பிரேக்கப் செய்த கியாரா அத்வானி.. திடீரென என்ன நடந்தது?

மும்பை: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஜோடியாக நடித்து வரும் நடிகை கியாரா அத்வானி தனது நீண்ட நாள் காதலரை பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார் நடிகை கியாரா அத்வானி.

நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸான லஸ்ட் ஸ்டோரிஸில் வைப்ரேட்டர் பயன்படுத்தும் காட்சிகளில் எல்லாம் படு போல்டாக நடித்து அசத்தி இருப்பார்.

ஷங்கர் பட நடிகை

ஷங்கர் பட நடிகை

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் RC15 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை கியாரா அத்வானி. ஏற்கனவே பரத் எனும் நான் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தெலுங்கில் இவர் நடித்துள்ளார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் இவர் தான் ஹீரோயின் எனக் கூறப்படுகிறது.

சித்துவுடன் காதல்

சித்துவுடன் காதல்

பிரபல பாலிவுட் ஹீரோ சித்தார்த் மல்கோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக பாலிவுட் வட்டாரங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இருவரும் பல இடங்களில் ஒன்றாக டேட்டிங் செய்துள்ளனர். விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியான ஷெர்ஷா படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர்.

ஷெர்ஷா

ஷெர்ஷா

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா இணைந்து நடித்த Shershaa படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்கான ஷூட்டிங்கின் போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.

பிரேக்கப்

பிரேக்கப்

அடிக்கடி சித்தார்த் மல்கோத்ராவின் வீட்டுக்கு நடிகை கியாரா அத்வானி செல்வதும் கியாரா வீட்டுக்கு சித்து வருவதுமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை என்கிற தகவல்கள் பாலிவுட்டில் கசியத் தொடங்கின. இந்நிலையில், நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரணை செய்ததில் இருவரும் பிரேக்கப் செய்து விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

படங்களில் பிசி

படங்களில் பிசி

நடிகை கியாரா அத்வானி நடிப்பில் விரைவில் 'Bhool Bhulaiyaa 2' படம் வெளியாகிறது. அந்த படத்தில் கார்த்திக் ஆர்யானுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். மேலும், வருண் தவாணின் 'Jug Jugg Jeeyo' படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில்

சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில்

ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து சித்தார்த் மல்கோத்ரா மிஷன் மஜ்னு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இருவரும் இணைந்து அரபிக் குத்து பாட்டுக்கு நடனம் ஆடியது வைரலான நிலையில், கியாரா அத்வானி எந்தவொரு ரியாக்‌ஷனையும் தெரிவிக்கவில்லை. மேலும், ஷில்பா ஷெட்டியுடன் வெப்சீரிஸ், யோதா மற்றும் தேங்க் காட் என அவருக்கும் பல படங்கள் கைவசம் உள்ளன.

அறிவிக்கவில்லை

அறிவிக்கவில்லை

இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் டேட்டிங் சென்று வருகின்றனர் என்றும் தகவல்கள் மட்டுமே இதுவரை வெளியாகி உள்ளன. ஆனால், இருவரும் தாங்கள் காதலிப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதே போல தற்போது இருவரும் பிரிந்து விட்டதாகவும் அறிவிக்கவில்லை. ஆனால், இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆகிவிட்டது என்கிற தகவல் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X