Don't Miss!
- News
ஆஹா.. மேலிடத்தோடு தொடர்பாமே? எடப்பாடி வகுக்கும் "சைலண்ட்" வியூகம்.. அப்போ ஓபிஎஸ்.. போச்சா?
- Finance
கூகுள் $17 பில்லியன் லாபம் பார்த்திருக்கு.. பணி நீக்கத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது..!
- Sports
வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
பிரம்மாண்ட திருமணத்துக்கு தயாரான ஷங்கர் பட ஹீரோயின்.. கியாரா அத்வானி திருமணம் எப்போ தெரியுமா?
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானிக்கும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி.
நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் இவர் வைப்ரேட்டர் பயன்படுத்தும் சீன் இன்றளவும் இணையத்தில் செம டிரெண்டாக சுற்றி வருகிறது.
ராம்
சரணின்
RC15
படப்பிடிப்பு
முடிந்தது..நியூஸிலாந்து
ஷெட்யூலை
முடித்த
ஷங்கர்!

கியாரா அத்வானி
2014ல் பாலிவுட்டில் வெளியான ஃபக்லி படம் மூலம் அறிமுகமானவர் கியாரா அத்வானி. அதன் பின்னர் 2016ல் வெளியான எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படம் இவருக்கு நட்சத்திர அந்தஸ்த்தை ஏற்படுத்தி கொடுத்தது. தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக 2017ல் வெளியான பரத் எனும் நான் படத்தில் நடித்திருந்தார் கியாரா அத்வானி. இந்தி, தெலுங்கு திரையுலகில் பிசி நடிகையாக நடித்து வரும் கியாரா அத்வானி பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து வருகிறார்.

பாலிவுட் நடிகருடன் காதல்
இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஷெர்ஷா படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ஏற்கனவே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில், அந்த படத்தில் நடித்த இருவரும் தங்கள் காதலை ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுத்தினர்.

அடுத்தாண்டு திருமணம்
பாலிவுட்டில் தொடர்ந்து பல முன்னணி நடிகைகள் திருமணம் செய்து வரும் நிலையில், 31 வயதான நடிகை கியாரா அத்வானியும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலியா பட் - ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல், மெளனி ராய் என அடுத்தடுத்து பிரபலங்கள் திருமணம் செய்து வரும் நிலையில், அடுத்தாண்டு நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் திருமண பந்தத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

எங்கே எப்போது
காதலர்கள் கொண்டாடும் மாதமான பிப்ரவரி மாதம் 6ம் தேதி ஜெய்சல்மார் அரண்மனை ஹோட்டலில் தான் இந்த நட்சத்திர தம்பதியினரின் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமணத்துக்காக இப்போதிருந்தே ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஷங்கர் பட ஹீரோயின்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 படத்தில் நடித்து வருகிறார் கியாரா அத்வானி. அதன் பின்னர், ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் அந்நியன் இந்தி ரீமேக் படத்திலும் இவர் தான் ஜோடி என சொல்லப்படுகிறது. இந்நிலையில், திடீரென திருமணத்தை முடித்து விட எப்படி சம்மதித்தார் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன. விரைவில் தங்கள் திருமணம் குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டிலும் கியாரா அத்வானி விஜய் படத்தில் அறிமுகமாவார் என சில ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.