ஷங்கர் பட நாயகியை அலேக்கா தூக்கி சுற்றும் ரூமர் காதலர்.. கல்யாண தேதியை சீக்கிரமே சொல்லிடுவாங்க போல?

மும்பை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அவருடைய ரூமர் காதலருடன் எடுத்துக் கொண்ட படு ரொமான்டிக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்‌ஷி தோனியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கியாரா அத்வானி.

சித்தார்த் மல்கோத்ராவும் அவரும் காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்களை கிளப்பி வருகின்றன.

வைப்ரேட்டர் சீன்

வைப்ரேட்டர் சீன்

நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் நடித்து உலகளவில் பிரபலமானாவர் நடிகை கியாரா அத்வானி. கணவன் உடன் தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாத பெண் அதற்காக வைப்ரேட்டர் பயன்படுத்துவது போல படு போல்டான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பியவர் கியாரா அத்வானி.

ரூமர் காதலர்

ரூமர் காதலர்

பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை நடிகை கியாரா அத்வானி காதலித்து வருவதாக பாலிவுட்டில் ஏகப்பட்ட மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. நெருப்பில்லாமல் புகையுமா என்பது போல இருவரும் நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களிலும் வைரலாகி உள்ளன.

ரொமான்டிக் போட்டோஷூட்

ரொமான்டிக் போட்டோஷூட்

இந்நிலையில், நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி இருவரும் இணைந்து படு ரொமாண்டிக்காக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நடிகை கியாரா அத்வானி ஏகப்பட்ட ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தி உள்ளார்.

அலேக்கா தூக்கி

அலேக்கா தூக்கி

அதுமட்டுமின்றி நடிகை கியாரா அத்வானியை அலேக்காக தூக்கி சுற்றும் வீடியோவையும் கியாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து 7 லட்சம் லைக்குகளை குவித்து அசத்தி வருகிறார். இருவருக்கும் எப்போ கல்யாணம் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கல்யாணம் எப்போ

கல்யாணம் எப்போ

ரொமாண்டிக் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை கியாரா அத்வானி ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் சும்மா ஹார்ட்டீன் எமோஜிக்களை அள்ளித் தெளித்து வருகிறார். ரூமர் காதலர்கள் இனி இல்லை என்றும் எப்போ திருமணம் என்பதை சீக்கிரம் அறிவியுங்கள் என்றும் சில பிரபலங்களே கமெண்ட் செய்து வருகின்றனர்.

காஸ்ட்லி கவுன்

காஸ்ட்லி கவுன்

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் படு ரொமான்டிக்காக கியாரா அத்வானி நடத்திய போட்டோஷூட்டிற்காக அவர் அணிந்திருக்கும் செஸ் போர்ட் டிசைன் போன்று இருக்கும் காஸ்ட்லி டிரெஸ்சின் விலை கிட்டத்தட்ட 79 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின ரிலீஸ்

சுதந்திர தின ரிலீஸ்

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ள ஷேர்ஷா படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. அந்த படத்திற்கான புரமோஷனுக்காகத் தான் இருவரும் இப்படி ரொமாண்டிக் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

கார்கில் போர்

கார்கில் போர்

தல அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தனின் முதல் பாலிவுட் படம் இது. கார்கில் போரில் வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் கதை தான் ஷேர்ஷா. அவர் மறைவுக்கு பின்னர் பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டு இந்திய அரசால் கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்னும் அறிவிக்கவில்லை

இன்னும் அறிவிக்கவில்லை

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் கியாரா அத்வானி அடிக்கடி நடிகர் சித்தார்த் மல்கோத்ரா வீட்டுக்கு சென்று வரும் வீடியோக்கள் எல்லாம் வெளியாகி உள்ள நிலையில், சீக்கிரமே இவர்களின் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றே பாலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஷங்கர் ஹீரோயின்

ஷங்கர் ஹீரோயின்

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை முடித்துள்ள நடிகர் ராம்சரண் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே வினய விதேய ராமா படத்தில் நடிகை கியாரா அத்வானி ராம்சரண் உடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X