இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் அடுத்த பிரம்மாண்டம்.. ஹீரோயின் யாரு தெரியுமா?

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இயக்குநர் ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

2.0 படமும் எதிர்பார்த்த அளவுக்கு இயக்குநர் ஷங்கருக்கு பெரிய வெற்றி கொடுக்கவில்லை.

இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில் நடித்து வரும் ராம்சரணை அடுத்ததாக இயக்கி தான் யாருன்னு நிரூபிக்க இயக்குநர் ஷங்கரும் கிளம்பி விட்டார்.

ஷங்கருக்கு சறுக்கல்

ஷங்கருக்கு சறுக்கல்

எந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கருக்கு இன்னமும் ஒரு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. விக்ரமை படாத பாடு படுத்தி எடுத்த ஐ படம் மற்றும் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமாரை வைத்து எடுத்த 2.0 என இரண்டு படங்களுமே பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு சற்றே சறுக்கலை கொடுத்தது.

முந்திய ராஜமெளலி

முந்திய ராஜமெளலி

இயக்குநர் ஷங்கரை ஓவர் டேக் செய்து விட்டு பாகுபலி படங்கள் மூலமாக உலக அரங்கில் பிரம்மாண்ட இந்திய இயக்குநர் என்கிற பெயரை இயக்குநர் ராஜமெளலி எடுத்து விட்டார். அடுத்தும் ஆர்.ஆர்.ஆர் என மற்றொரு பிரம்மாண்ட படத்தையும் ராஜமெளலி இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் மீண்டும் தனது இடத்தை பிடிக்கும் முயற்சியில் பெரிய வெற்றிக் கொடுக்க இந்தியன் 2 படத்தை கையில் எடுத்தார்.

இந்தியன் 2 டிராப்

இந்தியன் 2 டிராப்

தேசிய விருதை அள்ளிய இந்தியன் தாத்தா மீண்டும் களமிறங்கி இந்திய சினிமாவையே அலற விடுவார் என எதிர்பார்த்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து அந்த படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பிரச்சனையை பெரிதாக்கி விட்டது. இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 அப்படியே டிராப் ஆகி விட்டது. மீண்டும் தொடங்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.

அக்கரை பச்சை

அக்கரை பச்சை

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூலை குவிக்க வேண்டுமென்றால் ரஜினிகாந்தை தவிர மற்ற நடிகர்களை வைத்து மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியாது என நினைத்தாரோ என்னவோ இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து அடுத்த பிரம்மாண்டமான படத்தை இயக்க முடிவு செய்து விட்டார் ஷங்கர்.

ரன்வீர் சிங்கையும் விடல

ரன்வீர் சிங்கையும் விடல

இந்திய சினிமா ராஜமெளலியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், நான் யாருன்னு காட்டப் போறேன் என டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் காலடி வைக்க கோலிவுட்டுக்கு பெரிய கும்பிடு போட்டு மும்பைக்கு பறந்து சென்ற இயக்குநர் ஷங்கர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ரீமேக்கை இந்தியில் உருவாக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.

ராம்சரண் மார்க்கெட்

ராம்சரண் மார்க்கெட்

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிறகு நடிகர் ராம்சரணின் மார்க்கெட் பிரபாஸ் மார்க்கெட் போல வேற லெவலில் உயர்ந்து விடும் என்கிற நிலையில், வரும் ஆகஸ்ட் முதல் ராம்சரணின் 15வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கப் போகிறார். இந்நிலையில், தற்போது அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஹீரோயின் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அவரே தான்

அவரே தான்

இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக இயக்கப் போகும் இரண்டு பிரம்மாண்ட படங்களிலும் நடிகை கியாரா அத்வானி தான் ஹீரோயின் என்கிற பரம ரகசியம் ஏற்கனவே பக்காவாக கசிந்த நிலையில், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவே உறுதி செய்து விட்டது. இயக்குநர் ஷங்கர் உடன் கியாரா அத்வானி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

பர்த்டே பேபி

பர்த்டே பேபி

எம்.எஸ். தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்‌ஷி தோனியாக நடித்து பிரபலமான நடிகை கியாரா அத்வானி இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பர்த்டே பேபிக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கும் விதமாக RC15 படக்குழு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் இவர் தான் ஹீரோயின் என அறிவித்து ஹீரோயினை வாழ்த்தி உள்ளனர்.

ஏற்கனவே தெலுங்கில்

ஏற்கனவே தெலுங்கில்

நடிகை கியாரா அத்வானிக்கு தெலுங்கு திரையுலகம் ஒன்றும் புதிததல்ல ஏற்கனவே நடிகர் மகேஷ் பாபுவின் பாரத் அனே நேனு மற்றும் ராம் சரணின் வினய விதேய ராமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாக உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே தெலுங்கில்

ஏற்கனவே தெலுங்கில்

நடிகை கியாரா அத்வானிக்கு தெலுங்கு திரையுலகம் ஒன்றும் புதிததல்ல ஏற்கனவே நடிகர் மகேஷ் பாபுவின் பாரத் அனே நேனு மற்றும் ராம் சரணின் வினய விதேய ராமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாக உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நந்தினி கதாபாத்திரத்தில்

நந்தினி கதாபாத்திரத்தில்

ராம்சரண் மட்டுமின்றி இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக ரன்வீர் சிங்கை வைத்து இயக்க உள்ள அந்நியன் இந்தி ரீமேக் படத்திலும் நடிகை கியாரா அத்வானி தான் ஹீரோயின் என கூறப்படுகிறது. அந்நியன் படத்தில் சதா நடித்த அதே நந்தினி கதாபாத்திரத்தை இந்தியில் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளாராம்.

குவிகிறது வாழ்த்து

குவிகிறது வாழ்த்து

நடிகை கியாரா அத்வானியின் 29வது பிறந்தநாளை முன்னிட்டு பாலிவுட் முதல் டோலிவுட் ரசிகர்கள் வரை ஏகப்பட்ட பேர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் நடிகை கியாரா அத்வானியை வாழ்த்தி வருகின்றனர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து இரு பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் கியாரா அத்வானியின் சம்பளம் வேற லெவலில் உயரப் போவது மற்ற பாலிவுட் நடிகைகளுக்கு நிச்சயம் பொறாமையை கொடுக்கத் தான் செய்யும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X