Just In
- 25 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 31 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 40 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 1 hr ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
Don't Miss!
- Sports
"இங்க வாங்க லைன்".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்!
- News
கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்
- Education
டிப்ளமோ முடித்தவரா நீங்க? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சம்மர் வரப் போகுது.. கியாரா ரெடியாகிட்டார்.. ஜில் ஜில் கூல் கூல் போட்டோ ரிலீஸ்..ரசிகர்கள் குஷி!

சென்னை : பாலிவுட் நடிகை கியாரா அத்வானி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
கியாரா அத்வானி இந்தி திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து, மீண்டும் பாலிவுட்க்கு சென்று தற்போது பாலிவுட்டையே கலக்கி கொண்டு வருகிறார்.

இவரது இயற்பெயர் அலியா அத்வானி, தனது முதல் திரைப்படம் நடித்த பிறகு தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார். அஞ்சனா அஞ்சனி படத்தில் பிரியங்கா சோப்ராவின் பெயர் கியாரா. அப்பெயர் இவருக்கு மிகவும் பிடித்து போக தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார்.
கியாரா அத்வானி என்ன தான் 2014 ஆண்டு அறிமுகமானாலும் அவரை எல்லா மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த படம் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம். எஸ். தோனி தி அன் டோல்டு ஸ்டோரி தான். பின்பு 2018 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அங்கே இரண்டு படங்களில் நடித்தார் பின் மீண்டும் பாலிவுட்டிற்கே சென்றுவிட்டார்.

கடைசியாக அவர் நடித்த திரைப்படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்று, இப்பொழுது மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரும் அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாத் கப்பூர் உடன் இணைந்து நடித்தார். அப்படம் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளங்கள் உருவாக்கியது. இந்தியில் தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளார்.

இவர் அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது வழக்கம். கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தனது சூட்டை தணிக்கவும் ரசிகர்களின் சூட்டை தணிக்கவும் கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு உள்ளார் கியாரா அத்வானி. அப்புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த போட்டோஷுட் இவர் ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு இந்த போட்டோஷுட்டை பார்த்ததும் இளநீர் மற்றும் தர்பூசணியை சாப்பிட்டதால் சூடு தணியும் ஆனால் இந்த போட்டோவை பார்த்தாலே சூடு தணியும் போல உள்ளது என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.