'சந்திரமுகி 2'.. ராகவா லாரன்ஸ் ஜோடியாக அந்த பாலிவுட் ஹீரோயின் இல்லையாமே.. படக்குழு மறுப்பு!

By

சென்னை: சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில், பிரபல பாலிவுட் ஹீரோயின் நடிக்க இருப்பதாக வந்த தகவலை படக்குழு மறுத்துள்ளது.

Recommended Video

Chandramukhi -2 வில் Jothika விற்கு பதில் Simbran | P. Vasu, Lawrence

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெற்றிபெற்ற திரைப்படம், 'சந்திரமுகி'. இதில் நயன்தாரா, பிரபு, வடிவேலு, வினீத், மாளவிகா, நாசர், உட்பட பலர் நடித்திருந்தனர்.

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வித்யா சாகர் இசை அமைத்திருந்தார்.

வடிவேலு காமெடி

வடிவேலு காமெடி

2005-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது. வடிவேலுவின் காமெடியும், ரஜினியின் வேட்டையன் கேரக்டரும் பாடல்களும் இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்றாக இருந்தன. இதனால் குடும்பத்தினர் கொண்டாடும் படமாக இது இருந்தது. இப்போதும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வடிவேலு காமெடி பேசப்படுவதாக இருக்கிறது.

890 நாட்கள் ஓடியது

890 நாட்கள் ஓடியது

சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் இந்தப் படம் 890 நாட்கள் ஓடியது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில், தான் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக, தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தில் இருந்து 3 கோடி ரூபாயை, கொரோனா நிவாரணத்துக்கு வழங்கினார்.

காஞ்சனா இந்தி ரீமேக்

காஞ்சனா இந்தி ரீமேக்

கொரோனா பிரச்னைகள் முடிந்த பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது என்றும் ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். படத்தை பி.வாசு இயக்குவதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே லாரன்ஸ் தனது காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்திருந்தார். லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர்.

கியாரா அத்வானி

கியாரா அத்வானி

இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கியாரா அத்வானி, சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த தகவலில் உண்மை இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் நடிப்பவர்கள் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கொரோனா பிரச்னை முடிந்தபிறகே மற்ற பிரச்னைகள் பேசப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X