வருண் தவான் படத்தில் இருந்து திடீரென வெளியேறிய கியாரா அத்வானி.. ஏன் தெரியுமா?

மும்பை: லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மூலம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை கியாரா அத்வானி, வருண் தவானின் புதிய படத்தில் இருந்து திடீரென வெளியேறி உள்ளார்.

எம்.எஸ். தோனி பயோபிக் படத்தில் சாக்‌ஷி தோனியாக பாலிவுட்டில் அறிமுகமான கியாரா அத்வானி, கலங்க் படத்தில் வருண் தவானுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அந்த பாடல் பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், வருண் தவான், கியாரா அத்வானி புதிய படத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி பாலிவுட் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியது. ஆனால், தற்போது கியாரா அத்வானி அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்

பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்

இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான படங்களிலேயே ஹிரித்திக் ரோஷனின் வார் படத்திற்கு பிறகு 300 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் சாதனையை செய்தது கபீர் சிங் படம் தான். தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான கபீர் சிங் படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்து முத்த மழை பொழிந்திருந்தார்.

குட் நியூஸ்

குட் நியூஸ்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் சட்டென இடம் பிடித்துள்ள கியாரா அத்வானி, அக்‌ஷய் குமாருடன் நடித்திருக்கும் குட் நியூஸ் படம் இன்று ரிலீசாகியுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கி வரும் அக்‌ஷய் குமார் படம் என்பதால், கியாரா அத்வானிக்கு இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி ஹீரோயின்

தளபதி ஹீரோயின்

தளபதி 64 படத்தில் கியாரா அத்வானி தான் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என மிகப்பெரிய வதந்தி கிளம்பியது. ஆனால், அந்த படத்தில் மாளவிகா மோகனன் இணைந்துள்ளதால், அடுத்த படத்தில் நிச்சயம் இந்த காம்போவை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

காஞ்சனா நாயகி

காஞ்சனா நாயகி

குட் நியூஸ் படத்தை தொடர்ந்து அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கிலும் கியாரா தான் அக்‌ஷய் குமாருக்கு ஜோடி.

ஏன் விலகல்?

ஏன் விலகல்?

பாலிவுட்டில் செம்ம பிஸியாக பல படங்களில் நடித்து வரும் கியாரா அத்வானி, ஸ்ட்ரீட் டான்சர் படத்தை தொடர்ந்து வருண் தவான் நடிக்கும் 'மிஸ்டர் லெலி' படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். கியாரா அத்வானிக்கு ஏற்பட்டுள்ள கால்ஷீட் பிரச்சனையே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

மீண்டும் ஷ்ரத்தா கபூர்

மீண்டும் ஷ்ரத்தா கபூர்

கியாரா அத்வானி ‘Mr. Lele' படத்தில் இருந்து விலகும் பட்சத்தில் ஸ்ட்ரீட் டான்சர் 3டி படத்தில் வருண் தவானுடன் ஜோடி போட்டு செம்ம ஆட்டம் ஆடிய நடிகை ஷ்ரத்தா கபூர் மீண்டும் இந்த படத்திலும் அவருக்கு ஜோடி சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிடவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X