இயக்குனரை உசுப்பேற்ற ரவுடியுடன் புகைப்படம்... டிவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

விஜய் தேவரகொண்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை கியாரா அத்வானி.

சென்னை: விஜய் தேவரகொண்டாவுடன் புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கியாரா அத்வானி.

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்ற தெலுங்கு படம் அர்ஜுன் ரெட்டி. இப்படம் தமிழில் ரீமேக்காகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் நடிக்கிறார்.

Kiara Advanis selfie with Vijay Devarakinda

தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. சந்தீப் வாங்கா இயக்கத்தில் கபீர் சிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், சாஹித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தில் ப்ரீத்தி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கியாரா அத்வானி. இவர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கியாரா. மேலும், "இது உங்களுக்கு தான் சந்தீப் வாங்கா. அர்ஜுனை ப்ரீத்தி சந்தித்த போது. ஏய் ரவுடி தேவரகொண்டா", என அவர் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவை விஜய் தேவரகொண்டாவும் லைக் செய்துள்ளார். மேலும் கியாராவின் ரசிகர்களும் அந்த புகைப்படத்தை லைக் செய்து, தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X