Thalapathy 64: கியாரே... கியாரா?

By Siva

சென்னை: தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கபிர் சிங் நாயகி கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூல் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் கியாரா அத்வானி. அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கில் ஹீரோயினாக நடித்து அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

கபிர் சிங் ஷாஹித் கபூருக்கு மட்டும் அல்ல கியாராவுக்கும் பெரிய அளவில் ஹிட்டான படமாகும்.

தளபதி 64

தளபதி 64

கபிர் சிங் பட வெற்றிக்கு பிறகு கியாரா அத்வானியை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் ஹீரோயினாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தளபதி 64 படத்தில் த்ரிஷா நடிக்கிறார், ராஷி கன்னா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் பாலிவுட்டில் இருந்து ஒரு ஹீரோயினை அழைத்து வந்தால் நன்றாக இருக்கும் என்று விஜய், லோகேஷ் ஆகியோரில் ஒருவர் விரும்பியதாகவும், அதனால் கியாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது. தளபதி 64 படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

கியாரா

கியாரா

கியாரா தவிர கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனாவின் பெயரும் தளபதி 64 படத்துடன் சேர்ந்து அடிபடுகிறது. கியாராவுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் தனது டேட்ஸை அட்ஜஸ்ட் செய்வதாக கூறியுள்ளார். கியாரா தற்போது ஷெர்ஷா, முனி 2 படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம்ப் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கியாரா அத்வானி. லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற நெட்பிளிக்ஸ் தொடரில் சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியில் துணிந்து நடித்து அனைத்து மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் கியாரா என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்

விஜய்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அவர் டப்பிங் பேச உள்ளார். இந்நிலையில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி வருவதில் தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. பிகில் படத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளதால் அதை பார்த்த ரசிகர்கள் மரண வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X