'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின்.. தமிழில் அறிமுகமாகிறார்!
சென்னை: சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில், ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம், 'சந்திரமுகி'. இதில் நயன்தாரா, பிரபு, வடிவேலு, வினீத், மாளவிகா, நாசர், உட்பட பலர் நடித்திருந்தனர்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வித்யா சாகர் இசை அமைத்திருந்தார்.

வடிவேலு காமெடி
2005-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது. வடிவேலுவின் காமெடியும், ரஜினியின் வேட்டையன் கேரக்டரும் பாடல்களும் இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்றாக இருந்தன. இதனால் குடும்பத்தினர் கொண்டாடும் படமாக இது இருந்தது. இப்போதும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வடிவேலு காமெடி பேசப்படுவதாக இருக்கிறது.

890 நாட்கள் ஓடியது
சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் இந்தப் படம் 890 நாட்கள் ஓடியது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் கூறி இருந்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே இயக்குனர் வாசு, சந்திரமுகி படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை தான் உருவாக்கி விட்டதாகக் கூறி இருந்தார்.

ராகவா லாரன்ஸ்
இதற்கிடையே கொரோனா லாக்டவுன் நேரத்தில், பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில், தான் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக, தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தில் இருந்து 3 கோடி ரூபாயை, கொரோனா நிவாரணத்துக்கு வழங்கினார். கொரோனா பிரச்னைகள் முடிந்த பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

கியாரா அத்வானி
இதற்கிடையே லாரன்ஸ் தனது காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்திருந்தார். லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ள இதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கியாரா அத்வானி, சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

லஸ்ட் ஸ்டோரிஸ்
கியாரா அத்வானி, ஃபக்லி என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். எம்.எஸ்.தோனி: த அன்டோல்ட் ஸ்டோரி, நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ், கபீர் சிங், குட்நியூஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பாரத் அனே நேனு, வினாய விதேய ராமா ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஷ்ணுவர்தன் இந்தியில் இயக்கும் ஷேர்ஷா படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











