அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் ஐட்டம் சாங்.. அந்த ஹீரோ படத்தில் ஆடுகிறார் நடிகை சன்னி லியோன்!
சென்னை: தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகை சன்னி லியோன், சுதீப் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்.
Recommended Video
நடிகை சன்னி லியோன், இந்தி படங்களில் நடித்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி ரசிகர்களை திணறடித்தார்.
தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்தார்.

தமிழில் வடகறி
தென்னிந்திய சினிமாவுக்கும் வந்த சன்னி லியோன், மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். தமிழில், ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இப்போது மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ரங்கீலா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இந்தியா முழுவதும்
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள சன்னிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள். இவரது கணவர் டேனியல் வெபர். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி, வாடகைத்தாய் மூலம் பெற்ற ஆசேர் மற்றும் நோவா சிங் என்ற குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்
கொரோனா தீவிரம் அடைந்தபோது மும்பையில் இருந்த சன்னி லியோன், பிறகு சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கிருந்து அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். இவர் இப்போது சுதீப் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார். சுதீப் நடிக்கும் படம், கோடிகோப்பா 3. கன்னடத்தில் உருவாகும் இந்தப் படம், இந்தி, தமிழ் உள்பட சில மொழிகளில் உருவாகிறது.

ஸ்ரத்தா தாஸ்
மடோனா செபாஸ்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரத்தா தாஸ், அப்தாப் ஷிவதசானி, நவாப் ஷா உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கும் சன்னி லியோன், இந்தப் படத்தில் நடனம் ஆட ஆர்வமாக இருக்கிறேன். இதன் பாடல் காட்சி அழகியலுடன் படமாக்க இருக்கிறது. இந்தப் பாடல் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார் சன்னி லியோன்.


Click it and Unblock the Notifications











