இந்தி மொழி சர்ச்சையில் அஜய் தேவ்கன் பின்னால் மர்ம நபர்?: பகீர் கிளப்பும் கிச்சா சுதீப்

பெங்களூரு: ட்வீட்டரில் அஜய் தேவ்கன் உடன் ஏற்பட்ட மோதல் குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

என்னுடன் அஜய் தேவ்கன் மோத மூன்றாம் நபர் ஒருவர் காரணமாக இருக்கலாம் என கிச்சா சுதீப் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தி தேசிய மொழி என்ற சர்ச்சையில் ஏற்பட்ட கிச்சா சுதீப், அஜய் தேவ்கன் மோதல் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தி மொழி தொடர்பாக கிச்சா சுதீப் போட்டிருந்த ட்வீட்டர் பதிவில், அஜய் தேவ்கன் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றி கடும் மோதலில் போய் முடிந்தது. கிச்சா சுதீப், அஜய் தேவ்கன் ஆகியோரின் ரசிகர்களும் ட்வீட்டரில் அதிரடியாக மோதிக் கொண்டனர். இந்தச் சம்பவம் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

யாருப்பா அந்த மர்ம நபர்?

யாருப்பா அந்த மர்ம நபர்?

கிச்சா சுதீப்பின் ட்வீட்டர் பதிவுகளுக்கு உடனுக்குடன் எதிர் கருத்துகளைக் கூறி பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டே சென்றார் அஜய் தேவ்கன். கிச்சா சுதீப்பும் அஜய் தேவகனுக்கு அடுத்தடுத்து பதிலடி கொடுத்து கலங்கடித்தார். இதனால், இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள கிச்சா சுதீப், அஜய் தேவ்கனுக்கு பின்னால் மர்ம நபர் இருந்திருக்கலாம் என சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

தோஸ்த்து படா தோஸ்த்து

தோஸ்த்து படா தோஸ்த்து

இந்தப் பிரச்சினைகள் ஒருபக்கம் இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அஜய் தேவ்கன் தனக்கு நெருங்கிய நண்பர் என்று கிச்சா சுதீப் தெரிவித்துள்ளது, இருவரது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அஜய் தேவ்கன் பக்கா ஜெண்டில்மேன் எனவும் அவருக்கு கிச்சா சுதீப் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். தனது கருத்துக்கு அஜய் தேவ்கன் இந்தியில் பதிலளித்தது மட்டுமே என்னை யோசிக்க வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ரன்வே 34 படத்திற்கான விளம்பரமா?

ரன்வே 34 படத்திற்கான விளம்பரமா?

இந்தி மொழி குறித்த கிச்சா சுதீப்பின் டிவீட்டர் பதிவுக்கு அஜய் தேவ்கன் மோத காரணம், அவர் நடிப்பில் அப்போது வெளியாக இருந்த ரன்வே 34 படத்தின் விளம்பர உத்தியாக இருக்கும் என பலரும் விமர்சித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ரன்வே 34' திரைப்படம் பெரும் தோல்வியைத் தழுவியதோடு, விரைவில் ஓடிடியிலும் வெளியானது தனிக் கதை.

கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா

கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா

இந்த நிலையில், கிச்சா சுதீப் நடித்துள்ள,விக்ராந்த் ரோணா திரைப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமான இது 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'விக்ராந்த் ரோணா' படம் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் அஜய் தேவ்கன் உடனான ட்வீட்டர் மோதல் குறித்து கிச்சா சுதீப் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X