கிச்சா சுதீப்புக்கு இவ்ளோ பெரிய மகளா?.. 20வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாழ்த்திய அப்பா!
பெங்களூர்: கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்புக்கு 52 வயதாகிறது. ராஜமெளலி இயக்கத்தில் நானி, சமந்தா நடித்த 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பான் இந்தியா அளவில் ரீச் ஆனார். 'பாகுபலி' படத்திலும் கட்டப்பா சத்தியராஜுடன் ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருப்பார்.
தமிழில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 'முடிஞ்சா இவன புடி' படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அந்த படத்தில் கிச்சா சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார்.

கன்னடத்தில் தொடர்ந்து பல பெரிய படங்களில் நடித்து வரும் கிச்சா சுதீப்பிற்கு சான்வி சுதீப் என்கிற ஒரேயொரு மகள் மட்டுமே உள்ளார். 20வது பிறந்தநாளை தனது பெண் குழந்தை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அப்பா கிச்சா சுதீப் வாழ்த்து தெரிவித்து போஸ்ட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
கன்னட நடிகர் கிச்சா சுதீப்: 1997ம் ஆண்டு 'தாயவ்வா' படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் கிச்சா சுதீப். தமிழில் அஜித் நடித்த வாலி படத்தின் கன்னட வெர்ஷனாக அதே டைட்டிலில் வெளியான வாலி படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்து அசத்தினார். அஜித்தின் தீனா படத்தை தம் என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்தார். 2003ம் ஆண்டு வெளியான கிச்சா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், சுதீப் என்கிற பெயர் அதன் பின்னர் கிச்சா சுதீப் என மாறியது.
5 பெரிய படங்கள்: 2022ம் ஆண்டு கடைசியாக கிச்சா சுதீப் நடித்த பிரம்மாண்ட படமான விக்ராந்த் ரோணா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், யஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி போல தானும் ஒரு பான் இந்தியா வெற்றியை கொடுக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார். மேக்ஸ், கிச்சா 47, கிச்சா 48, பில்லா ரங்கா பாஷா, கப்ஸா 2 என கைவசம் தற்போது 5 பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

20 வயது மகள்: 2001ம் ஆண்டு பிரியா சுதீப் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட கிச்சா சுதீப்புக்கு 2004ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. சான்வி என பெயர் சூட்டி வளர்த்து வரும் நிலையில், இன்று அவர் தனது 20வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கிச்சா சுதீப்.
சான்வி என்ன பண்றாரு?: அப்பாவை போலவே இவருக்கும் சினிமாவில் தான் அதிக ஆர்வம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிம்மி எனும் படத்தில் பாடல் ஒன்றை பாடி பின்னணி பாடகியாக கன்னட திரையுலகில் அறிமுகமானார். மேலும், விக்ராந்த் ரோணா படத்திலும் இவர் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடல்களை பாடி வரும் சான்வியை அவரது ரசிகர்கள் சீக்கிரமே ஹீரோயின் ஆகிடுங்க என கமெண்ட் போட்டு பர்த்டே விஷ் செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பாஸ் பேபி லுக்கில் தான் இவர் போட்டோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











