இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்!

பெங்களூரு: கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஆரம்பமாகாமல் இருந்த கன்னட பிக் பாஸ் விரைவில் ஆரம்பமாகப் போகிறது.

இயக்குநர் ராஜமெளலியின் நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கிச்சா சுதீப் தான் கன்னட பிக் பாஸை இம்முறை தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற அசத்தலான அப்டேட் வெளியாகி உள்ளது.

இந்த வருஷம் அந்த நிகழ்ச்சியை காண முடியாமல் தவித்துக் கிடந்த ரசிகர்களுக்கு சீக்கிரமே சூப்பர் ட்ரீட் காத்துக் கொண்டு இருக்கிறது.

டிஆர்பி கிங்

டிஆர்பி கிங்

உலகளவில் பிக் பிரதர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற விட்ட காரணத்தினால், இந்தியாவில் இந்தி மொழியில் சல்மான் கான் தொகுத்து வழங்க அறிமுகமானது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய ரசிகர்களின் ஃபேவரைட் ஷோவாக மாறி உள்ளது.

உலக நாயகன்

உலக நாயகன்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொடர்ந்து 4 சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு என்றே சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனிக் கூட்டமும், டிஆர்பி ரேட்டிங்கும் வேற லெவல் அதிகரித்து வருவது தான் அந்த நிகழ்ச்சியின் பலம்.

பிரபலங்களின் வாழ்க்கை

பிரபலங்களின் வாழ்க்கை

ஒவ்வொரு மொழியிலும் அந்த மொழியில் டாப் ஹீரோக்களை வைத்தே இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ரியாலிட்டி ஷோ, பிரபலங்களின் வாழ்க்கையை மக்கள் நேரில் காணும் வாய்ப்பு என ஏகப்பட்ட சிறப்புகள் இருப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிட் அடித்து வருகிறது.

டாப் ஹீரோக்கள்

டாப் ஹீரோக்கள்

பாலிவுட்டில் பல வருஷங்களாக சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நானி, நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன் லால், கன்னடத்தில் சுதீப் என ஏகப்பட்ட பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

சமந்தாவும்

சமந்தாவும்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கி உள்ளார். அதன் பின்னர், அந்த பணியை நாகார்ஜுனா செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு சிறப்பு எபிசோடை நடிகை சமந்தா தொகுத்து வழங்கி பட்டையை கிளப்பினார். முன்னதாக ரம்யா கிருஷ்ணனும் ஒரு எபிசோடை தொகுத்து வழங்கி அதிர வைத்துள்ளார்.

கொரோனாவால் இல்லை

கொரோனாவால் இல்லை

இந்தி, தமிழ், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த கொரோனா காலத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மிகவும் கவனமாக பின்பற்றி, போட்டியாளர்களை குவாரண்டைன் செய்து பங்கு பெற வைத்து வருகின்றனர். மலையாளத்தில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி 75வது நாளில் நின்று போனது. கன்னடத்தில் இந்த ஆண்டு துவங்கவே இல்லை.

கன்னட பிக் பாஸ்

கன்னட பிக் பாஸ்

இந்நிலையில், விரைவில் கன்னட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. நம்மை விட 4 வருஷம் முன்னாடியே ஆரம்பித்து விட்டார்கள் போல தெரிகிறது. மேலும், இந்த முறை கன்னட பிக் பாஸை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற அறிவிப்பும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பாகுபலி நடிகர்

பாகுபலி நடிகர்

இயக்குநர் ராஜமெளலியின் நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கிச்சா சுதீப் தான் கன்னட பிக் பாஸை இம்முறை தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற அசத்தலான அப்டேட் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் சில சீசன்களை இவர் தொகுத்து வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சங்கராந்தி

சங்கராந்தி

வருட கடைசியை நெருங்கி விட்டதால், வரும் சங்கராந்தி முதல் பிக் பாஸ் கன்னடா சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும், அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2020ம் ஆண்டு கன்னட பிக் பாஸ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லை என்றாலும், அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே அவர்களுக்கு சூப்பரான விஷயம் காத்துக் கொண்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X