'நடிப்பைக் கண்டு திகைத்துப் போனேன்..' 'சூரரைப் போற்று' சூர்யாவை பாராட்டும் சூப்பர் ஸ்டார் நடிகர்!
சென்னை: சூரரைப் போற்று படத்தைப் பார்த்துவிட்டு, நடிகர் சூர்யாவை பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் பாராட்டியுள்ளார்.
Recommended Video
சூர்யா நடித்துள்ள படம், 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார்.
இதில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்திருக்கிறார். பரேஸ் ராவல், ஊர்வசி, மோகன்பாபு, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சூர்யாவின் மாறா
இந்தப் படம், ஓடிடி தளமான அமேசான் பிரைமில் கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை பலர் பாராட்டி வருகின்றனர். சூர்யாவின் மாறா கேரக்டரை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

வாழ்க்கை கதை
இயக்குனர் சுதா கொங்கராவையும் பாராட்டி வருகின்றனர். சாதாரண மக்களும் விமானப் பயணம் செய்வதற்காக பட்ஜெட் விமானப் போக்குவரத்தை துவக்கிய ஏர்டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தினமும் ஒரு விஷயம்
அதை சினிமாவுக்காகக் கொஞ்சம் மாற்றி, கமர்சியலாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார், சுதா கொங்கரா. இந்தப் படம் பற்றி ஏதாவது ஒரு விஷயம் தினமும் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. படத்தைப் பார்த்துவிட்டு சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் சுதீப்
சில நாட்களுக்கு முன் பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு, சூர்யாவை பாராட்டி இருந்தார். இப்போது கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் பாராட்டியுள்ளார். இவர் தமிழில், நான் ஈ, முடிஞ்சா இவனப்புடி, புலி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர், உங்கள் சிறப்பான நடிப்பை கண்டு திகைத்துப் போனேன் என்று கூறியுள்ளார்.

வாழ்த்துகள் ஃபிரன்ட்
இதுபற்றி ட்விட்டரில், உங்கள் நடிப்பை கண்டு திகைத்தேன். எழுந்து நின்று கைதட்ட தோன்றுகிறது. வாழ்த்துகள் ஃபிரன்ட்' என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











