'நயனின் அந்தப் படம் தோல்வியடைய இது தான் காரணம்'.. பேட்டியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல வில்லன்!

வரலாற்று படத்தில் புனைவுகளை சேர்த்தது தான் சைரா நரசிம்ம ரெட்டியின் தோல்விக்கு காரணம் என நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.

மும்பை: சிரஞ்சீவி, நயன்தாரா நடித்திருந்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை நடிகர் கிச்சா சுதீப் வெளிப்படுத்தியுள்ளார்.

'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் கிச்சா சுதீப். அதைத்தொடர்ந்து நிறைய படங்களில் வில்லனாகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள தபாங் 3 படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வரும் 20ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படத்தை விளம்பரம் செய்யும் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

அதன் ஒரு பகுதியாக ஊடகங்களுக்கு சுதீப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் படுதோல்வி அடைந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சைரா நரசிம்ம ரெட்டி ஒரு வாழ்க்கை வரலாற்று படம். எனவே அதில் நிறைய உண்மைகள் இருக்க வேண்டும்.

புனைவுகள் அதிகம்

புனைவுகள் அதிகம்

ஆனால் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் புனைவுகள் அதிகம் இருந்தது. அதனால் தான் அது மக்களிடம் எடுபடவில்லை. பாகுபலி ஒரு மிக புனைவு படம் என்பதால் தான் அதில் வெற்றி பெற்றது", என தெரிவித்தார்.

டோலிவுட்டில் சர்ச்சை

டோலிவுட்டில் சர்ச்சை

சைரா நரசிம்ம ரெட்டி வசூலில் வெற்றி பெற்றதாக அதன் தயாரிப்பாளர் ராம்சரண், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில், சுதீப்பின் இந்த பேட்டி தெலுங்கு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஜமவுலியை உயர்த்தி பேசி, மற்றவர்களை கிச்சா சுதீப் மட்டம் தட்டுவது சரியல்ல என்றும் கலகக்குரல் கேட்க ஆரம்பித்துள்ளன.

சைரா நரசிம்ம ரெட்டி

சைரா நரசிம்ம ரெட்டி

சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் சமீபத்தில் வெளிவந்த படம் சைரா நரசிம்ம ரெட்டி. இதில் கிச்சா சுதீப்பும் நடித்திருந்தார். சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை தழுவி, அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: sudeep sye raa narasimha reddy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X