»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை கீர்த்தனாவின் தாயார் சாய்லட்சுமி கடத்தப்பட்டார். அவரைக் கடத்தியகீர்த்தனாவின் தந்தையிடமிருந்து போலீசார் மீட்டனர்.

நடிகை கீர்த்தனா நாளைய தீர்ப்பு, மைனர் மாப்பிள்ளை உட்பட பல திரைப்படங்களில்நடித்தவர். அவரது தாயார் சாய்லட்சுமியை அவரது தந்தையே கடத்திச் சென்றார்.

சொத்து தகராறு காரணமாக இந்தக் கடத்தல் நடைபெற்றதாக கூறப்டுகிறது. நடிகைகீர்த்தனாவும் அவர் தாய் சாய்லட்சுமியும் மதுரவாயிலுக்கு அருகே ஆலப்பாக்கத்தில்வசித்து வருகின்றனர். கீர்த்தனாவின் தந்தை காசிலிங்கம் தனியாக வசித்து வருகிறார்.

சாய்லட்சுமி வீட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் தங்கி இருப்பதாகவும் அதுகாசிலிங்கத்திற்கு வெறுப்பு ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் அவர்சாய்லட்சுமியை இளங்கோ என்பவருடன் சேர்ந்து வேனில் கடத்திச் சென்றார்.

வேன் அம்பத்தூர் எஸ்டேட் அருகே உள்ள சிக்கனலில் நின்ற போது, என்னைக்காப்பாற்றுங்கள் என சாய்லட்சுமி குரல் கொடுத்துள்ளார். இதைக் கேட்டு அங்குரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேனை மடக்கிப் பிடித்துகாசிலிங்கத்தையும், இளங்கோவையும் கைது செய்தனர்.

கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக தனசேகர், தேவா ஆகிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil