அம்மா தானம் செய்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்ததா?: ராணா விளக்கம்

By Siva

ஹைதராபாத்:

அமெரிக்காவில் தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான தகவல் குறித்து ராணா விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை என்றும் அதற்கு ஹைதராபாத் மற்றும் மும்பையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து அமெரிக்கா சென்ற ராணாவுக்கு அவரின் அம்மா லக்ஷ்மி தனது சிறுநீரகத்தை தானம் செய்தார். அதன்படி ராணாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து ராணா விளக்கம் அளித்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திகள் குறித்து ராணா கூறியதாவது,

கணிப்பு

கணிப்பு

ஏற்கனவே நிறைய கணித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்து ஓய்ந்துவிட்டேன். அதனால் என் உடல்நலம் பற்றிய வதந்திகள் தற்போது போர் அடிக்கும் செய்தி. நான் ஹைதராபாத்தில் இருந்து எங்காவது கிளம்பினால் மக்கள் உடனே எனக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்து பயப்படுகிறார்கள்.

நன்றி

நன்றி

மக்கள் என் மீது வைத்திருக்கும் அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி. நான் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான இரண்யகஷ்யபாவின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை கவனிக்கவே அமெரிக்காவுக்கு வந்துள்ளேன். பல விஎஃப்எக்ஸ் நிறுவனங்களை சந்தித்து பேச வந்த இடத்தில் எனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக கூறுவதில் உண்மை இல்லை என்று ராணா தெரிவித்துள்ளார்.

ராணா

ராணா

ராணா விரத பர்வதம் என்கிற தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திற்காக தான் அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும் தோலுமாக ஆகியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ராணா தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலப் பிரச்சனை

உடல்நலப் பிரச்சனை

விரத பர்வதம் படத்திற்காக ராணா தனது உடல் எடையை குறைக்க அவருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இப்படி ஆகிவிட்டார் என்று பேச்சு கிளம்பியது. ராணா தனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று விளக்கம் அளித்தாலும் அதை யாரும் நம்ப தயாராக இல்லை. இந்நிலையில் தான் அவர் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X