வாவ்.. வாட் எ கோரியோகிராஃபி.. டிக்கிலோனா பாடலுக்கு இந்த குட்டீஸ் போட்ட ஆட்டத்த பாருங்க!

சென்னை: டிக்கிலோனா பாடலுக்கு சிறு பிள்ளைகள் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இந்தப் படத்தை காத்திக் யோகி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷரின் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ட்ரைலர் வெளியீடு

ஏற்கனவே ட்ரைலர் வெளியீடு

மேலும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கமல் பாடல் ரீமிக்ஸ்

கமல் பாடல் ரீமிக்ஸ்

இந்தப் படம் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஓடிடி தளமான ஜீ 5 தளத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்தப் படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேரு வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடலை டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் செய்திருந்தார் யுவன் சங்கர் ராஜா.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு

ஏற்கனவே இந்த பாடல் சிங்கிள் ட்ராக்காக வெளியானது. அப்போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இப்பாடல். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடலின் வீடியோ காட்சியும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

குழந்தைகள் க்யூட் டான்ஸ்

குழந்தைகள் க்யூட் டான்ஸ்

பலரும் அப்பாடலுக்கு தங்களின் வெர்ஷனில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் குட்டி குழந்தைகள் சிலர் சேர்ந்து செம க்யூட்டாக நடனமாடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் நைஸ் கோரியோகிராஃபி நைஸ் சினிமாட்டோ கிராஃபி என்று பாராட்டி வருகின்றனர்.

லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ

ஜோடி ஜோடியாக பீட்டுக்கு ஏற்ப அவர்கள் போடும் ஸ்டெப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Read more about: dikkiloona song
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X