ஹீரோயின் போல கெத்து காட்டும் கிகி... ஜீ தமிழின் அடுத்த ஷோவிற்கு ரெடி

சென்னை : நடிகர் சாந்தனுவின் மனைவியும் பிரபல தொகுப்பாளருமான கிகி விஜய் அனைவரின் விருப்பத்திற்கு உரியவர்.

இவர் அவ்வப்போது பல நடன வீடியோக்களை பதிவிட்டு வெளியிட்டு வருகிறார்.

சிறப்பான தொகுப்பாளரான இவர் ஜீ தமிழில் அடுத்த ஷோவிற்கு தற்போது ரெடியாகி வருகிறார்.

டிவி தொகுப்பாளர் கிகி விஜய்

டிவி தொகுப்பாளர் கிகி விஜய்

நடிகர் சாந்தனுவின் மனைவியும் சிறப்பான தொலைக்காட்சி தொகுப்பாளருமான கிகி விஜய் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இவரது தொகுப்பில் பல நிகழ்ச்சிகள் சிறப்பான அங்கீகாரத்தை ரசிகர்களிடையே பெற்று விடும். மேலும் பல சினிமா நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ

சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ

மேலும் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்திவரும் கிகி, அடுத்தடுத்து டான்ஸ் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிருந்தா மாஸ்டருடன் இணைந்து நடனமாடி இவர் வெளியிட்ட டான்ஸ் வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்றது.

நடன வீடியோக்கள்

நடன வீடியோக்கள்

இதேபோல இவர் நடனமாடி சாந்தனு வீடியோ எடுத்து வெளியிட்ட நடன வீடியோவும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிக பார்வைகளை பெற்றது. இதுமட்டுமின்றி தன்னுடைய கணவரின் முயற்சிகளுக்கும் தொடர்ந்து துணை நின்று வருகிறார் கிகி.

சிறப்பான தம்பதி

சிறப்பான தம்பதி

இது மட்டுமின்றி, சாந்தனு -கிகி இருவரும் இணைந்து விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் மற்றவர் முயற்சிகளுக்கு துணை நின்று வருகின்றனர். இதையொட்டி கோலிவுட்டின் ஆதர்ச தம்பதிகளாக அறியப்படுகின்றனர்.

ஜுனியர் சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி

ஜுனியர் சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் கிகி, தற்போது ஜீ தமிழின் ஜுனியர் சூப்பர்ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறார். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

கிகி மகிழ்ச்சி

கிகி மகிழ்ச்சி

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள கிகி, சிறப்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் ஹீரோயின்களுக்கே சவால்விடும் வகையில் சிறப்பான உடையுடன் அழகாக காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X