'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க!
'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' படத்துக்கு தியேட்டர் கிடைக்காததால் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் நாளை வெளியாக இருந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் ரஜாக் இயக்கியுள்ள படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. பின்னணி பாடர் மனோவின் மகன் ரத்தீஷ் மற்றும் நடிகை இனியாவின் சகோதரி தாரா, கதாநாயகன், நாயகியாக அறிமுகமாகின்றனர்.

கே பாக்யராஜ், ஆர் சுந்தர்ராஜன், ஆர் வி உதயகுமார், அனு மோகன், ராஜ் கபூர், மன்சூர் அலிகான் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் மே 25 (நாளை) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது போதுமான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பரத் நடித்துள்ள பொட்டு திரைப்படத்துக்கும் இதே பிரச்சினை எழுந்ததால், நாளை வெளியாக இருந்த அந்த படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் விரக்தியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











